சேவைகளின் மூலம் தொழில் முனைவோர்கள் தங்கள் நிறுவனங்களை முறைப்படுத்திக்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்துள்ளார்.
பெண் தொழில்முனைவோர்களுக்கான அழைப்பு:
TN-RISE மகளிர் புத்தொழில் கவுன்சில் நிறுவனமானது மாநிலத்தின் கிராமப்புறங்களில் உள்ள பெண்களிடையே தொழில் முனைவை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு முழுவதும் பெண்கள் தலைமையிலான மற்றும் சொந்தமாக உள்ள தொழில் நிறுவனங்களுக்கு சந்தை இணைப்புகள், நிதி மற்றும் செயல்பாட்டு ஆலோசனைகளை வழங்குகிறது. மேலும், பெண் தொழில் முனைவோர் மத்தியில் தங்களின் தொழிலுக்குத் தேவையான தொழில் சம்பந்தப்பட்ட பதிவுகள் மற்றும் சான்றிதழ்கள் இல்லாதது அவர்களின் தொழிலின் முன்னேற்றத்திற்கும் விரிவாக்கத்திற்கும் ஒரு பெரும் தடையாகவுள்ளது.
தொழிலை மேம்படுத்த தேவையான சேவைகள்
எனவே, மதுரை மாவட்ட கிராமப்புரங்களில் உள்ள தொழில் முனைவோர்களின் நிறுவனங்களுக்கு தொழிலை மேம்படுத்த தேவையான சேவைகளை வழங்குவதற்காக Compliance Mela-வினை TN-RISE நிறுவனம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கீழ்க்காணும் தொழில் முனைவோர் சேவைகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்வு (07.02.2025) அன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை அலங்காநல்லூர் பிரதான சாலை உள்ள, வேளாண் உணவு வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது.
. PAN
. TAN
. (UDYAM)
. FSSAI
. GST
. வர்த்தக முத்திரை (Trade Mark)
. DPIIT (DPIIT Registration)
. காப்புரிமை தாக்கல் (Patent Filing)
. நிறுவனப் பதிவு (Company Registration)
. இறக்குமதி ஏற்றுமதி சான்றிதழ் பதிவு (Import Export CertificateRegistration)
. ஆயுஷ் சான்றிதழ் பதிவு (AYUSH Certificate Registration)
. NPOP சான்றிதழ் விண்ணப்பம் (NPOP Certificate Application)
. இன்குபேஷன் டிரைவ் (Incubation Drive)
. இன்குபேஷன் டிரைவ் (Incubation Drive)
. கடன் வசதி இணைப்பு (Credit Facilitation)
. பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் உதவி (Packaging and Labeling Drive)
மேற்காணும் சேவைகளின் மூலம் தொழில் முனைவோர்கள் தங்கள் நிறுவனங்களை முறைப்படுத்திக்கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயன்பெறலாம் என்று மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தெரிவித்துள்ளார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அழகாய் மாறப்போகுது நம்ம மதுரை... இறுதிக்கட்டத்தில் பணிகள்..இதில் இவ்வளவு வசதிகள் வருகிறதா..?
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அம்மனை வழிபட்ட இஸ்லாமிய பெண்கள்.. மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடந்த கோயில் கும்பாபிஷேக விழா..!