காரைக்குடியில் முத்துமாரியம்மன் கோயில் முளைக் கொட்டுத் திண்ணை கும்பாபிஷேக விழாவில் பழங்கள் சீர்வரிசை தட்டுடன் பங்கேற்ற இஸ்லாமியர்கள்.

 

இந்துக்கள் - இஸ்லாமியர்கள் ஏராளமானோர் ஒற்றுமையுடன் வசித்து வருகின்றனர்

 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அண்ணாநகர் பகுதியில் இந்துக்கள் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் ஒற்றுமையுடன் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மன் கோயில் முளைக்கொட்டு திண்ணை கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு அண்ணாநகர்  பகுதியைச் சேர்ந்த பள்ளிவாசல் ஜமாத் சார்பில் இஸ்லாமியர்கள் பழங்கள் சீர்வரிசை தட்டுகளுடன் வருகை தந்து கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர். 

 

மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக கும்பாபிஷேகம்

 

இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய பெண்களும் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தனர். மதநல்லிணக்கத்திற்கும், மத ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக யாக சாலை பூஜிக்கப்பட்ட புனித நீர்  சிவாச்சாரியார்கள் மந்திரங்கள் முழங்க முளை கொட்டு திண்ணை விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து அம்மனுக்கும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் காரைக்குடி மற்றும் அண்ணா நகர் சுற்றுப்புற பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.