‘மதுரையில் வாக்கிங் போகாதீங்க ; அப்பறம் இடைத் தேர்தல் வந்துரும்’ - காரணம் சொன்ன செல்லூர் ராஜூ

எடப்பாடி பழனிசாமி எப்படி ஆட்சி செய்யப் போகிறார் என விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் 4.5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்துள்ளார்.

Continues below advertisement
2026ல் எடப்பாடி பழனிசாமியின் சாணக்கியத்தனத்தை பார்ப்பீர்கள், "Wait and see" என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
 
மதுரை கோச்சடையில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அப்பகுதியில் பஸ் ஸ்டாப் அமைப்பதற்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.
 
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு
 
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மக்களுக்கு வரி மேல் வரி விதித்து வருகின்றனர். 40 தொகுதிகளில் வெற்றி பெற செய்த மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வை பரிசாக அளித்துள்ளார். மின் கட்டணத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
 
 
தமிழகத்தில் ஏற்படும் சட்ட - ஒழுங்கு பிரச்னை குறித்த கேள்விக்கு
 
மதுரையில் தொடர் கொலை நடைபெற்று வருவதால் நடைபயிற்சிக்கு செல்ல கூட மக்கள் அச்சப்படுகின்றனர். திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில்,  தி.மு.க., முன்னாள் அமைச்சரே நடைபயிற்சியின்போது வெட்டிக் கொல்லப்பட்டார். இப்படி அவர்கள் ஆட்சியில் எப்போதும் சட்ட ஒழுங்கு பிரச்னை உள்ளது. தமிழகத்தில் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது.
 
அ.தி.மு.க., கோட்டை என்று சொன்னீர்கள் ஆனால் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டதே?
 
நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் டாக்டர் சரவணனை வானளாவ புகழ்ந்து பேசி வாக்கு கேட்டோம். ஆனால், மக்கள் சட்டமன்றத்திற்கு ஒரு பார்வை, நாடாளுமன்றத்திற்கு ஒரு பார்வை என வாக்குகளை செலுத்தியுள்ளனர். யானைக்கும் அடி சறுக்கும். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா தலைமையே தோல்வியை சந்தித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் களம் வேறு. இந்த முடிவுகள் இறுதி அல்ல. காலம் மாறும். அதிமுக மீண்டும் அரியணை ஏறும். எடப்பாடி பழனிசாமி எப்படி ஆட்சி செய்யப் போகிறார் என விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் 4.5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்துள்ளார். 2026ல் எடப்பாடி பழனிசாமியின் சாணக்கியதனத்தை பார்க்கப்போகிறீர்கள் என்றார். சசிகலா சுற்றுப்பயணம், அதிமுக பிளவுகள், ஒன்றிணைவது குறித்த கேள்விக்கு, "Wait and see" என பதிலளித்தார்
 
 
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - All Party Meeting: ஜூலை 21-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்; மத்திய அரசு அழைப்பு
Continues below advertisement