ஆடுகள் பாடம் படிப்பது போல் தனது X தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கிண்டலடித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. “நான் வீடியோவை பார்த்து விட்டேன் நீங்களும் பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
லண்டன் சென்ற அண்ணாமலை
சமீப நாட்களாகவே அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சிக்காரர்களுக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் வார்த்தை போர் நிலவி வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுகவை மிகவும் கடுமையாக விமர்சித்து வந்தார். அதேபோல அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வந்தனர். இது பெரும் வார்த்தை போராக இருந்து வந்தது. இந்த நிலையில் அரசியல் மேற்படிப்பிற்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்றைய தினம் லண்டன் சென்று விட்டார்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்படிப்பிற்காக லண்டன் சென்றதை கிண்டல் அடிக்கும் விதத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கூட்டமாக ஆடுகள் அமர்ந்து படிப்பது போல் உள்ளது. மேலும் ”தமிழக பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை மேற்படிப்புக்காக லண்டன் சென்றதை ஒரு குறும்புக்காரர் ஊடகத்தில் இப்படி போட்டு இருக்கார், நான் பார்தேன் நீங்களும் பாருங்கள் என்று மறைமுகமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கிண்டலடித்துள்ளார். இந்த வீடியோவை மதுரை அதிமுகவினரும் பல்வேறு சமூக வலைதளங்களில் பதிவிட்டு அண்ணாமலையை கலாய்த்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Saripodhaa Sanivaaram Twitter Review : எஸ்.ஜே சூர்யா-நானி காம்போ எப்படி? சரிபோதா சனிவாரம் ட்விட்டர் விமர்சனம் இதோ!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - அமெரிக்கா சென்றடைந்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்: உற்சாக வரவேற்பு: என்ன ப்ளான்?