அவசர கால சிகிச்சைக்காக கொண்டுவரும் ஆம்புலன்ஸ் வாகனத்தில் வேலைக்கு சேர விருப்பமுள்ளவர்கள் பணியில் சேர EMERGENCY HEALTH SERVICES வேலை வாய்ப்பு மூலம் வரும் வெள்ளிக்கிழமை தேனி அரசு தலைமை மருத்துவமனையில் ஆள் சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. 





தேதி 30-08-2024 வெள்ளிக்கிழமை,  காலை : 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை,  இடம் : தேனி அரசு மருத்துவமனை கல்லூரி


கல்வித்தகுதி : B.Sc நர்சிங், அல்லது GNM, ANM, DMLT( 12-ம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்கவேண்டும் ) அல்லது Life Science Graduates (B.ScZoology, Botony, Bio-Chemisty, Micro-biology, Bio -Technology)


மாத ஊதியம்: ரூ.16,080/- (மொத்த ஊதியம்)


பாலினம் : ஆண் மற்றும் பெண்


தேர்வு முறை : 1. எழுத்துத் தேர்வு 2.மருத்துவ நேர்முகம்.உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணிதொடர்பானவை 3. மனிதவளத் துறையின் நேர்முகம்.


குறிப்பு : 1. தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையானவகுப்பறை பயிற்சி மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்தநடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும் (பயிற்சிக்காலத்தில் தங்கும்வசதி செய்து தரப்படும்.


கல்வித்தகுதி : 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.


மாத ஊதியம் : ரூ.15,820/- (மொத்த ஊதியம்)


வயது : நேர்முக தேர்வு அன்று 24 வயதுக்கு மேலும் 35வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்


பாலினம் : ஆண் மற்றும் பெண்


உயரம் : 162.5 செ.மீ. குறையாமல் இருக்க வேண்டும்.


ஓட்டுநர் தகுதி : இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்துகுறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் Badge வாகனஉரிமம் எடுத்து குறைந்த பட்சம் 1 ஆண்டுகள் நிறைவுபெற்றிருக்க வேண்டும்.


தேர்வுமுறை : 1. எழுத்துத் தேர்வு, 2.தொழில் நுட்பத் தேர்வு3.மனிதவள துறை நேர்காணல், 4.கண்பார்வைசம்பந்தப்பட்ட தேர்வு, 5. சாலை விதிகளுக்கான தேர்வு


குறிப்பு: தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முழுமையான வகுப்பறை, மருத்துவமனை மற்றும்ஆம்புலன்ஸ் சார்ந்த பயிற்சி அளிக்கப்படும். (பயிற்சி காலத்தில் தங்கும் வசதி உண்டு)


பணி நேரம் : 12 மணி நேரம் Shift என்ற முறையில் இரவு பகல் என மாறும்


குறிப்பு : நேர்முக தேர்விற்கு கலந்து கொள்ளும் அனைவரும் அசல் சான்றிதல்களை சரிபார்ப்பதற்காக அவசியம் கொண்டு வரவேண்டும்.