நேற்று முன் தினம் இரவு சென்னையில் இருந்து விமானத்தில் கிளம்பிய முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாலை அமெரிக்கா சென்றடைந்தார். அவரை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். 


தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின் 17 நாட்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் புறப்பட்டார். அவருக்கு அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், திமுக தொண்டர்கள், என பலரும் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். 






இந்நிலையில், இன்று அதிகாலை முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா சென்றடைந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்றிலிருந்து முதலீடுகளை ஈர்க்க பல்வேறு தொழிலதிபர்களை முதல்வர் சந்திக்க உள்ளார். 


அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோவிற்கு சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு வரும் 2ம் தேதி வரை தங்கியிருக்கிறார். அங்கு இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். வரும் 31ம் தேதி அமெரிக்க வாழ் தமிழர்களைச் சந்திக்கிறார். அமெரிக்கா வாழ் தமிழ் தொழிலதிபர்களை இந்தியாவில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க திட்டமிட்டுள்ளார்.


2ம் தேதி வரை சான் பிரான்ஸிஸ்கோவில் தங்கியிருக்க திட்டமிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பின்னர் சிகாகோ செல்கிறார். அங்கு உலகின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான பார்ச்சூன் நிறுவன தலைமை அதிகாரிகளைச் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.






சான் பிரான்ஸ்சிஸ்கோ, சிகாகோவில் பல முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து பேச உள்ளார். செப்டம்பர் 2ஆம் தேதி வரை சான் பிரான்சிஸ்கோவில் தங்கி பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்பின்னர் செப்டம்பர் 3ஆம் தேதி சிகாகோ செல்லும் முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட இருக்கிறார். மீண்டும் செப்டம்பர் 12ஆ தேதி முதமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.