டிஜிட்டல் எல்லா இடங்களிலும் கடந்த சில வருடங்களில் ஊடுருவ ஆரம்பித்துவிட்டது. மிகப்பெரும் மால் முதல் பெட்டிக்கடை வரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்நிலையில் காலணி தைக்கும் தொழிலாளியின் கடைக்கு வந்தது மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



இந்தியாவில் சுமார் 658 மில்லியன் இணைய பயனர்கள் மற்றும் சுமார் 1.2 பில்லியன் மொபைல் சந்தாதாரர்கள் இருக்கின்றனர். டிஜிட்டல் இந்தியா கொள்கை பல கட்டங்கள் முன்னோக்கி வருகிறது. அதில் பிரதான ஒன்றாக இருப்பது டிஜிட்டல் பரிவர்த்தனை. சிறிய கடை முதல் பெரிய கடை வரை அனைத்திலும் டிஜிட்டல் பரிவர்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. சிறிய பொருள் வாங்கினால் கூட ஸ்கேனர் போர்ட் எங்கே இருக்கிறது என்ற கேள்வி அனைவராலும் கேட்கத் தொடங்கப்பட்டுவிட்டது.



 

இந்நிலையில் தான் மதுரை மாவட்டம் கல்மேடு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்,  அவரது தந்தை காலத்தில் இருந்து 50 வருடங்களாக செருப்பு தைக்கும் தொழிலை மதுரை கோரிப்பாளையம் சந்திப்பில் செய்து வருகின்றனர் இந்நிலையில் டிஜிட்டல் பணம் பரிவர்த்தனைக்கு தன்னை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் தற்போது கூகுள் பே போன் பே QR Code ஸ்கேனர்களைக் தனது செருப்பு தைக்கும் கடையிலும் வைத்துள்ளார். இது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.