அறுபடை வீடுகளில்  மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.


Palani Temple Hundiyal Collection: பழனி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை - வசூல் எவ்வளவு..?


விழாக்காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள், முருகப்பெருமானை தரிசித்துவிட்டு உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதற்காக கோவில் நிர்வாகம் சார்பில், கோவில் வளாகத்தில் பல்வேறு உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த உண்டியல்கள் நிரம்பியவுடன், அதில் உள்ள பணம், தங்கப் பொருட்கள் எண்ணி அளவிடப்பட்டு வருகிறது.


PAK vs AUS: பெங்களூருவில் ஆதிக்கம் செலுத்துமா ஆஸ்திரேலியா? பந்தாடுமா பாகிஸ்தான்..? இன்றைய உலகக்கோப்பை போட்டி!’



அதன்படி, பழனி முருகன் கோவிலில், கடந்த மாதம் 26, 27-ந் தேதிகளில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை பணி நேற்று தொடங்கியது. கோவில் இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் கோவில் அலுவலர்கள், வங்கி பணியாளர்கள், பழனியாண்டவர் கல்லூரி மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக கோவில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், தங்கம், வெள்ளி நகைகள், வெளிநாட்டு கரன்சிகள், பட்டு வஸ்திரங்கள் ஆகியவை காணிக்கை எண்ணும் பணி நடக்கும் மண்டபத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு, எண்ணி அளவிடும் பணி நடந்தது.


Latest Gold Silver Rate October,20 2023: உச்சத்தில் தங்கம் விலை...சவரனுக்கு எவ்வளவு? இன்றைய நிலவரம் இதுதான்!


இதற்கிடையே உண்டியல் காணிக்கை மூலம், ரூ.2 கோடியே 51 ஆயிரத்து 581 வருவாய் கிடைத்தது. இதேபோல் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 406 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்க சங்கிலி, மோதிரம், வேல் உள்ளிட்ட தங்க பொருட்கள் 657 கிராம், வெள்ளியிலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் என 9 கிலோ (9,217 கிராம்) காணிக்கையாக கிடைத்தது. 2-வது நாளாக, வெள்ளிக்கிழமை இன்றும்  உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுகிறது.