மதுரை தண்டாயுதபாணி கோயிலில் தட்டு காணிக்கைகள் திருக்கோயில் கணக்கில் வரவு வைக்கப்படும் வழக்கம் உள்ளது - தட்டு காணிக்கையை உண்டியலில் செலுத்த வேண்டும் என்ற கோவில் செயல் அலுவலரின் தன்னிச்சையான உத்தரவு என இந்து அறிநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.
 
சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது
 
மதுரை மாவட்டம் நேதாஜி ரோட்டில் உள்ள அருள்மிகு பாலதண்டாயுத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில்  தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவருகிறார்கள். இது இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது இந்த நிலையில் பாலதண்டாயுத சுவாமி திருக்கோவில் செயல் அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 
 
இதில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்துவது சுவாமிக்கும் அர்ச்சகர் தட்டில் விழும் காணிக்கையை உண்டியலில் போடும் உத்தரவை பிறப்பித்துள்ளது. அர்ச்சகரில் தட்டில் விழும் காசை கட்டாயமாக காவலில் இருக்கும் ஊழியர்கள் அர்ச்சகர் தட்டில்  அதை உண்டியலில் தான் போட வேண்டும் என உத்தரவை இல்லை யென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளது பேசுபொருளாக ஆனதை தொடர்ந்து, 
 
கோயில் செயல் அலுவலர் விளக்கம்
 
இது குறித்து கோவில் செயல் அலுவலர் அங்கையற்கண்ணி விளக்கம் அளிக்கும் போது, ”கோவிலில் பணியாற்றக்கூடிய அர்ச்சகர் உள்ளிட்ட அனைத்து பணியாளர்களும் அரசு ஊதியம் பெற்று வருகின்றனர். இதனால் அர்ச்சனை தட்டில் பெறப்படும் பணத்தினை உண்டியலில் செலுத்த வேண்டும் என்பது விதி அதன்படி தான் தற்பொழுது சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
 
இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் அறிக்கை
 
”மதுரை மாநகர் நேதாஜிசாலை, அருள்மிகு தண்டாயுதபாணிசுவாமி திருக்கோயில் சட்டப்பிரிவு 46(iii)-60 கீழ் வகைப்படுத்தப்பட்ட திருக்கோயிலாகும்- மேற்படி திருக்கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு காலமுறை ஊதியத்தில் சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டு ஊதியம் வழங்கப்படுவதால் ஆரம்ப காலத்திலிருந்து பக்தர்கள் அளிக்கும் தட்டு காணிக்கைகள் திருக்கோயில் கணக்கில் வரவு வைக்கப்படும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.
 
இருந்தபோதிலும் திருக்கோயில் செயல் அலுவலரால் தட்டு காணிக்கை தொடர்பாக 07.02.2025 அன்று பிறப்பித்த உத்தரவு மேற்படி திருக்கோயில் செயல் அலுவலரால் திரும்ப பெறப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை திருக்கோயில் தக்காரிடம் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளதால் மேற்படி திருக்கோயில் செயல் அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது” என மதுரை மண்டல இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் அறிக்கை.
 
தட்டுக்காணிக்கை தொடர்பாக விவாதகங்கள் நடைபெற்று வரும் சூழலில் இந்து அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது.