மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சேவை நிறுத்தம் - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தற்கு பிறகு நீர் நிரப்பப்பட்டு மீண்டும் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement
மதுரையின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம். திருமலை நாயக்கர் மஹால் கட்டுப்பட்டுவதற்காக தோண்டப்பட்ட இடத்தில் இந்த தெப்பக்குளம் உருவாக்கப்பட்டது, இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளம் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகம் மற்றும் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர்.
 
 மேலும் மதுரை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்திறக்கப்பட்ட கருப்பண்ண சாமி கதவுகள்; வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் நிகழ்ச்சி

 
 
அறநிலைத்துறைக்கு சொந்தமான மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உட்பட்ட மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக முழுமையாக தண்ணீர் நிரம்பி அழகுற காட்சியளித்து வருகிறது. தெப்பக்குளத்தில்  ஒரு ஆண்டுகளுக்கு முன்பாக  படகு சவாரியும் துவங்கப்பட்டது. இது மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை படகு இயக்கப்படும். இந்த தெப்பக் குளத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் வைகை ஆற்றில் இருந்து நேரடியாக தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.
 
 
 
இந்த நிலையில் தெப்பக்குளத்தில் தண்ணீர் குறைந்ததன் காரணமாக படகு சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததற்கு பிறகு நீர் நிரப்பப்பட்டு மீண்டும் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
 
 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

Continues below advertisement

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola