வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

 

மதுரை மேலூருக்கு உட்பட்ட  அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் திருக்கோயில் வளாகத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடிமாதம் நடைபெறும் ஆடிப்பிரம்மோற்சவ பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி திருவிழாவை காண பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி கட்டி வருவது சிறப்பாக இருக்கும். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய அழகர்கோவிலில் ஆடிப்பெருந் திருவிழாவில் திருக்கோவில் பட்டர்கள் வேத மந்திரங்கள் முழங்க, பக்தர்களின் "கோவிந்தா, நமோ நாராயணா" என்ற பக்தி கோஷத்துடன்  நடைபெற்று வருகிறது.

 




 


இதையொட்டி கிட்டதட்ட 11 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஸ்வாமி தினசரி காலை பல்லக்கிலும், இரவு வாகனங்களிலும் அருள் பாலிக்கின்றார். அன்ன வாகனம், சிம்ம வாகனம், தங்க வாகனம், அனுமன் வாகனம், கருட வாகனம், சேஷ வாகனம், யானை வாகனம், தங்க குதிரை வாகனம் என தினமும் ஒவ்வொரு வாகனத்தில் கள்ளழகர் எழுந்தருளினார். இதனையொட்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நேற்று காலை இலட்சகணக்கான பக்தர்களின் கோவிந்தா என்ற கோஷத்துடன் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, மாலை ஆடி மாத பௌர்ணமியையொட்டி, அழகர்கோவில் காவல் தெய்வமான பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவிலில், வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும்  சந்தனக்காப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 





 

இதனையொட்டி, பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கோவில்,  பதினெட்டு படிக்களுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கற்பூர தீபாராதனை ஏற்றப்பட்டு, கதவுகள் திறக்கப்பட்டது.  அப்போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "கோவிந்தா, கருப்பா " என்ற கோஷத்துடன் பக்தி பரவசமாக சாமி தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி கதவுகள் அடைக்கப்பட்டு, மாலைகள் சாற்றப்பட்டு தீபாராதனையும், சந்தன காப்பு உற்சவமும் நடைபெற்றது.

 


 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண