நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக பாம்புகளுடன் போராட்டம் - 51 பழங்குடியினர் மீது காவல்துறை வழக்குப்பதிவு

’’சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதங்கள் நடக்கும் பட்சத்தில் அவர்கள் மீது விச பாம்பை கொண்டு எறிவோம் என்று பழங்குடிகள் போராட்டத்தின்போது கூறியிருந்தனர்’’

Continues below advertisement
இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிப்பில் ஜெய்பீம் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி ஓ.டி.டியில் வெளியானது. பழங்குடியினர் மற்றும் இருளர் சமுதாயத்தை சேர்ந்த மகக்ளுக்கு அரசு மற்றும் காவல் துறை அதிகாரிகளால் அவர்களுக்கு ஏற்படும் இன்னல் குறித்து அப்பட்டமாக பேசி இருந்த இந்த படம் உலகம் முழுவதும்  பல்வேறு தரப்பினரின் வரவேற்பை பெற்றுள்ளது.
 
 
 
இதில் குறிப்பிட்ட காட்சியில் வரும் காலண்டர் வன்னியர்களின் குறியீடு என்று கூறி அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ம.கவினர் தொடர்ந்து ஜெய்பீம் படத்துக்கு எதிராக போராட்டங்களையும் ஆர்ப்பாட்டங்களையும் கடிதங்களையும் வெளியிட்டு வந்தனர். மேலும் படத்தின் இயக்குநர் மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இந்த நிலையில் யாரையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் இல்லை அப்படி புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக ஜெய்பீம் பட இயக்குநர் ஞானவேல் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.

கீழடியில் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சுடுமண் உறை கிணறு கண்டுபிடிப்பு...!

Continues below advertisement

இந்நிலையில் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழக பழங்குடியினர் கூட்டமைப்பின் சார்பில் பழங்குடியின மக்கள் இணைந்து பாம்புகள், எலிகள், தோல் பாவைக்கூத்து, பூம்பூம் மாடு உள்ளிட்டவற்றையும் நடனத்திற்காக சூர்யாவிற்கு நன்றி தெரிவிப்பதாக கூறி ஆதரவு போராட்டத்தை நடத்தினர். அப்போது இது குறித்து பேசிய கூட்டமைப்பின் தலைவர் மகேஸ்வரி, ஜெய்பீம் படத்தில் எங்களுடைய சமுதாயம் சந்திக்கும் இன்னல்களை சூர்யா அப்படியே காட்டியுள்ளார். தற்பொழுது சூர்யா எதிராக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சூர்யாவுக்கு எதிராக அசம்பாவிதங்கள் நடக்கும் பட்சத்தில் அவர்கள் மீது விச பாம்பை கொண்டு எறிவோம் என்று ஆவேசமாக கூறினார். இந்த நிலையில் நடிகர் சூர்யா மற்றும் 'ஜெய்பீம்' திரைப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பாம்புகள், எலிகளோடு ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்நாடு பழங்குடி நாடோடிகள் கூட்டமைப்பை சேர்ந்த 21 பெண்கள் உட்பட 51 பேர் மீது தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola