கீழடியில் நடைபெற்று முடிந்த 7 ஆம் கட்ட அகழாய்வு தளத்தை ஆய்வு செய்த தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை  அமைச்சர் தங்கம் தென்னரசு அகழாய்வு குழிக்குள் இறங்கி அகழாய்வில் கிடைக்கப்பெற்ற தொன்மையான பொருட்களை பார்வையிட்டார். அப்போது தொல்லியல் துறை இயக்குநர் சிவானந்தம் உள்ளிட்ட தொல்லியல் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*



 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு: 7 ஆம் கட்ட அகழாய்வு நடைபெற்ற அகழாய்வு குழிகளை வழக்கம் போல் மூடிவிடாமல் அனைத்து நாட்களிலும் சுற்றுலா பயணிகள் பார்க்கும் வகையில் திறந்த வெளி அருங்காட்சியமாக மாற்றப்படும். அகழாய்வு குழிகள் திறந்த நிலையில் வைப்பது இதுவே முதன்முறை என தெரிவித்த அவர்  கட்டுமானங்கள், செங்கல் கட்டுமானங்களை பார்வைக்கு வைத்து பாதுகாக்க தொழில்நுட்ப வசதிகளை மேற்கொள்ள சென்னை ஐ.ஐ.டி யின் உதவியை நாட உள்ளதாகவும் தெரிவித்தார். 

 



 

8 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் குறித்து இன்னும்  முடிவுகள் எடுக்கவில்லை எனவும் முடிவு செய்த பின்னர் முறையாக அறிவிக்கப்பட்டும் எனவும் தெரிவித்தார். 7 ஆம் கட்ட அகழ்வாராய்ச்சியில் முதல் முறையாக மீன் சின்னம் பொறிக்கப்பட்ட சூடுமண் உரை கிணறு கிடைத்துள்ளது. 7 ஆம் கட்ட அகழாய்வில் பஞ்சு மார்க் நாணயம் கிடைக்கப்பெற்றுள்ளது  கங்கை சமவெளியோடு வாணிக தொடர்பை எடுத்து சொல்லும் அளவில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.



அதே போல் கீழயில் அகழாய்வுக் குழியில் உள்ள சுடு மண் உறை கிணற்றில் மீன் பொறிக்கப்பட்ட சின்னம் இருப்பதை அமைச்சர் தங்கம் தென்னரசு மகிழ்ச்சியையும் ஆச்சிரியத்தையும் ட்விட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். கீழடியில் 8-ம் கட்ட அகழாய்வுப் பணிகள் துவங்குவது குறித்து விரைவில் அறிவிக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - தீபாவளியை தித்திக்க வைக்கும் குடிசைத்தொழில் செட்டிநாடு ஸ்நாக்ஸ் ! ஸ்பெஷல் என்ன தெரியுமா?