5% சதவீதம் தள்ளுபடியினை பெற்றிடுமாறும், மதுரை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்குமாறு மதுரை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவித்துள்ளனர்.

 

வரிவசூலில் நான்காவது பெரிய மாநகராட்சி மதுரை மாநகராட்சி

 







நூறு வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சி என்பது தமிழக உள்ளாட்சி அமைப்பின் படி மாநகராட்சிகளில் ஒன்று.  தமிழ்நாட்டில் சென்னை, கோயமுத்தூருக்கு அடுத்தபடியாக பெரிய மாநகராட்சி மதுரை தான். இந்த மாநகராட்சி கீழ் ஆணையூர், திருப்பரங்குன்றம், அவனியாபுரம் என பெரிய பகுதிகளும் உள்ளடங்குகிறது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு, மத்தி என ஐந்து மண்டலங்களை கொண்டுள்ளது. மதுரை மாநகராட்சி வரி வசூலில் ஆண்டுக்கு 580 கோடிக்கு மேல் வரி வசூலாகி உள்ளது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5 % சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



 

சொத்துவரி உரிமையாளர்களுக்கு சொத்துவரி தொகையில் 5% சதவீதம் ஆஃபர்

 







மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து வசூலிக்கப்படும் சொத்து வரி, குடிநீர் மற்றும் பாதாளச் சாக்கடை பராமரிப்பு கட்டணம் ஆகிய வரி வருவாய் இனங்கள் மூலமும், வரியில்லாத வருவாய் இனங்கள் மூலமும் மாநகராட்சியில் பல்வேறு அடிப்படை வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி 2024-2025 ஆம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை எதிர்வரும் 31.10.2024 தேதிக்குள் செலுத்தும் சொத்துவரி உரிமையாளர்களுக்கு சொத்துவரி தொகையில் 5% சதவீதம் (அதிகபட்சமாக ரூ.5000) தள்ளுபடி வழங்கப்படும்.

 

வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்குமாறு கோரிக்கை

 

எனவே மதுரை மாநகராட்சி 100 வார்டுப் பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்துவரியினை 2024 அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் செலுத்தி 5% சதவீதம் தள்ளுபடியினை பெற்றிடுமாறும், மதுரை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்குமாறு மதுரை மாநகராட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது” என தெரிவித்துள்ளனர்.

 

இது போன்ற அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது 

 

மதுரை மாநகராட்சியில் சொத்துவரி செலுத்துவோர் பட்டியல் நீண்டு இருக்க, இதில் பலரும் வரி செலுதாமல் நிலுவையில் வைத்திருக்கும் சூழலில் ”மதுரை மாநகராட்சி அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு 5% சதவீதம் தள்ளுபடி” - என மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பலரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இது போன்ற அறிவிப்பால் பலரும் விரைவாக வரி செலுத்த முன்வருவார்கள் என அதிகாரிகள் தரிப்பில் தெரிவித்தனர். இதே போல் மதுரை மாநகராட்சி வளர்ச்சிக்கும், மாநகராட்சி வார்டுகளில் உள்ள அடிப்படை பிரச்னைகளையும் விரைவாக சரி செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.