உத்தமபாளையத்தில் இருந்து மேகமலைக்கு மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து உத்தமபாளையம் பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த கார், பைக் மற்றும் இட்லி கடை மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். மூன்று பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.




தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் இருந்து சின்னமனூர் அருகே உள்ள மேகமலைக்கு மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த லாரியினை உத்தமபாளையத்தைச் சார்ந்த அக்பர் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது ஞான அம்மன் கோவில் பிரிவு அருகே வளைவில் லாரி திரும்பி உள்ளது. ஆனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஆனது வலது புறம் சாலையில் நின்றிருந்த கார் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றை இடித்துக் கொண்டு இழுத்துச் சென்றுள்ளது.




Kavaraipettai Accident: கவரப்பேட்டை விபத்து! பீகார் நோக்கி சென்ற சிறப்பு ரயில் - பத்திரமாக செல்லும் பயணிகள்


மேலும் அதே திசையில் இருந்த மின்கம்பங்களை சேதப்படுத்தி அருகே இருந்த சாலையோர இட்லி கடைக்குள் புகுந்து நின்றுள்ளது. இந்த விபத்தில் காரில் அமர்ந்திருந்த சின்னமனூரைச் சார்ந்த கனகராஜ் மற்றும் இட்லி கடை நடத்தி வரும் வெள்ளையம்மாள் மற்றும் அவரது 14 வயது மதிக்கத்தக்க பேத்தி மற்றும் அருகே நின்று இருந்த கேரளா மாநிலத்தைச் சார்ந்த தாமஸ் மேத்யூ ஆகிய  நான்கு பேர் படுகாயம் அடைந்தனர்.சம்பவம் குறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் செங்குட்டு வேலவன் தலைமையில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துனறையிர் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.




காயமடைந்த நால்வரையும் மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு காயமடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்தில் சேதம் அடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 


Breaking News LIVE 12 Oct : அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை.. மேலும் ரூ.200 உயர்வு


சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் கேரள மாநிலத்தைச் சார்ந்த தாமஸ் மேத்யூ என்பவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவரது உடல் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை கூட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து உத்தமபாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய லாரி டிரைவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். காலை வேளையில் நடைபெற்ற சம்பவத்தால் உத்தமபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது