மதுரை மாநகரில் குறிப்பிட்ட நாளன்று கீழ்க்கண்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
மின் பாதையில் பராமரிப்பு பணிகள்
தமிழ்நாட்டில் பராமரிப்பு பணிக்காக மின்சாரம் நிறுத்தப்படும் போது அதுபற்றி முந்தைய நாளன்று அல்லது அதற்கு முன்பாக மின் வாரியம் மூலம் தகவல் அறிவிக்கப்படும். பராமரிப்பு பணிக்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட பகுதியில் மின்சேவை நிறுத்தப்படும். வழக்கமாக காலை 9 அல்லது 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை மின்சார பராமரிப்பு பணிகளுக்கான மின்சேவை நிறுத்தம் செய்யப்படும்.
- திருப்பதி லட்டுக்கு இணையான சுவையுடன் புட்டுமாவு உருண்டை; அம்மன் திருவிழாவில் ஸ்வாரசியம்!
தமிழ்நாடு மின் வாரிய மதுரை வடக்கு செயற்பொறியாளர் செய்திக் குறிப்பு
இதுபோன்ற பராமரிப்பு பணியின் பொழுது, சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டு இருந்தால் அதனை சரி செய்வது, மின்கம்பம் மற்றும் மின்வழி தடங்களில் உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். அந்தவகையில் மின் நிறுத்தம் தொடர்பாக தமிழ்நாடு மின் வாரிய மதுரை வடக்கு பெருநகர் செயற்பொறியாளர் S.R. ஸ்ரீராம் வெளியிட்டுள்ள தகவல்.
மதுரை மாநகரில் (08.10.2024) அன்று மின் தடை ஏற்படும் பகுதிகள் - 9 am to 5 pm
திருப்பாலை துணை மின்நிலையம்
திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா, வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யாநகர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமிநகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், P&T காலனி, பாமாநகர், பம்பா நகர், பொறியாளர் நகர், TWAD காலனி, சொட்டிகுளம், சண்முகா நகர், விஜய் நகர், கலைநகரின் ஒரு சில பகுதிகள், மீனாட்சி நகர், EB காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்
மகாத்மா காந்தி நகர் துணை மின்நிலையம்
விஸ்வநாதபுரம், மகாத்மா காந்தி நகர், முல்லை நகர், சிவக்காடு, கிருஷ்ணாபுரம் காலனி, ஆனையூர், பனங்காடி, மீனாட்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை மாநகரில் சூறைக்காற்றுடன் வெளுத்துவாங்கிய கனமழை: மரங்கள், மின்கம்பம் சேதம் !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!