திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் உள்ளது - அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

மும்மூர்த்திகளின் வடிவில் இருக்கிற தற்போதைய முதல்வர் அவர்களின் கொள்கைகளை வலியுறுத்தும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி, உயர்கல்வி பயில்கிற பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம்.

Continues below advertisement

திராவிட மாடல் ஆட்சியும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் உள்ளது என அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

Continues below advertisement


முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 106 கோடி மதிப்பீட்டில் திண்டுக்கல் மாவட்டம்  பழனி - தாராபுரம் இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணியை பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் எ.வ. வேலு,

Rs 6000 Flood Relief: வெள்ள நிவாரணம் ரூ.6,000...ஞாயிற்றுக்கிழமை ரேசன் கடைகள் இயங்கும்...தமிழ்நாடு அரசு அறிவிப்பு!


பெண்களைப் படி படி என்று சொன்ன இயக்கம் தான் திராவிட இயக்கம் என்றும் பெண்களைப் படிக்க வற்புறுத்திய மும்மூர்த்திகள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் என்றும் அந்த மும்மூர்த்திகளின் வடிவில் இருக்கிற தற்போதைய முதல்வர் அவர்களின் கொள்கைகளை வலியுறுத்தும் வகையில் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி, உயர்கல்வி பயில்கிற பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.

மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவன இடத்தை கேட்டு நிர்பந்திக்கிறோமா? அமைச்சர் எ.வ.வேலு பரபரப்பு விளக்கம்


தலையில் கரும்பு கட்டுடன்குறை தீர்வு கூட்டத்தை முற்றுகையிட்ட விவசாய குடும்பத்தினரால் பரபரப்பு

திராவிடத்திற்குள் தான் ஆன்மீகம் இருக்கிறது என்றும், திராவிட மாடல் ஆட்சியையும் ஆன்மீகத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். நிகழ்ச்சியில் கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ்  சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜன் மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் பொன்ராஜ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Continues below advertisement