அதிமுகவினரை அழைக்க ஓபிஎஸ்க்கு உரிமையில்லை என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், “அதிமுக அலுவலகத்தை உடைத்து பொருட்களை திருடி சென்றவர் பன்னீர்செல்வம். இரட்டை இலை சின்னத்தை முடக்க முயற்சி செய்தவர் பன்னீர்செல்வம். இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை கடுமையாக விமர்சித்தவர் அண்ணாமலை. உண்மையான பாசமும் பற்றும் இருந்தால் அண்ணாமலை பக்கம் அமர்ந்து இருக்க மாட்டார். பன்னீர்செல்வம் அவர்களுக்கு எந்த வித அறுகதையும் இல்லை, இது அதிமுக தொண்டர்கள் மற்றும் பொது செயலாளர் கருத்து.
சசிகலா அழைப்பை ஏற்று எத்தனை பேர் அவர் இல்லத்திற்கு சென்று உள்ளார்கள் என நீங்களே பாருங்கள். 24 மணி நேரம் ஆகியும் யாரும் செல்லவில்லை. அதிமுகவினரை அழைக்க ஓபிஎஸ்ஸிற்கு எந்த உரிமையும் இல்லை. 2019 தேர்தலில் கூட்டணியில் இருந்த நாங்கள் வாங்கிய வாக்கு சதவீதம் 19. தற்போது தனித்து போட்டியிட்டு நாங்கள் வாங்கிய வாக்கு 20.46 சதவீதம். ஆனால் இம்முறை திமுகவின் வாக்கு சதவீதம் கணிசமாக குறைந்துள்ளது. சுமார் 6 சதவீதம் குறைந்துள்ளது. வாக்களித்த அனைத்து மக்களுக்கு அதிமுக தரப்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.