தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அருள்மிகு குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோயில். இத்திருக்கோயில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு கோயிலாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.  இந்த கோயில் தற்போது அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இந்த கோயில் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கோயில் பரம்பரை அறங்காவலர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றமும் கோயிலை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தீர்ப்பளித்தது.


தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த ஊட்டி வர்க்கி: புவிசார் குறியீடு பெற்று அசத்தல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து




இந்நிலையில், இந்து சமய அறநிலை துறை சார்பில் இந்த தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிப்பெரும் திருவிழா இந்த ஆண்டு நடைபெறாது என அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. காரணம் கோயிலில் கொடிமரம் மற்றும் உப சன்னதிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகள் நடைபெறுகிறது. இதற்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளது.


Sonu Sood : உணவில் எச்சில் துப்பியதை நியாயப் படுத்திய நடிகர் சோனு சூட்... இணையத்தில் வலுக்கு கண்டனங்கள்




அதனால் இந்த ஆண்டு திருவிழா கொண்டாட முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனை அடுத்து திருவிழா ரத்து என அறிவிக்கப்பட்டது. ஆனால் திருவிழா நடைபெற வேண்டும் என்றும் திருவிழாவில் கோயிலில் பூஜை செய்வதற்கு அனுமதி வழங்கிட கோரி அறங்காவலர் குழுவினர் நீதிமன்றத்தை நாடி பூஜை செய்வதற்கு அனுமதி பெற்று வந்தனர். கடந்த முதல் வார சனிக்கிழமை முன்னிட்டு திருவிழா துவங்கியது. இதில் பூஜை செய்வதற்கு அறங்காவர் குழுவினர் வந்தவர்களை உள்ளே அனுமதிக்க அறநிலையத்துறை அதிகாரிகள் மறுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து இரு தரப்பு நிறையும் அழைத்து காவல்துறையினர் போடி துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.


மகளிர் தொகை கொடுத்துவிட்டு நாங்க படுற பாடு இருக்கே? - புலம்பிய அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்




இதில் பூஜை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் அந்த பூஜையானது கருவறைக்குள் சென்று நடத்துவதா? அல்லது கோயில் வளாகத்தில் பூஜை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா? என்று தெளிவாக குறிப்பிடவில்லை. மேலும் அறநிலை துறை அதிகாரிகள்  உயர் அதிகாரிகளிடமும் வழக்கறிஞர் குழுவிடமும் இந்த தீர்ப்பு குறித்து உரிய ஆலோசனை மேற்கொண்டு மூன்று தினங்களுக்கு பின்பே இதுகுறித்து தெரிவிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனை ஏற்க மறுத்து பரம்பரை அறங்காவலர் குழுவினர் தாங்கள் நீதிமன்றம் மூலமாக மீண்டும் தங்களது உரிமையை நிலைநாட்டிக் கொள்கிறோம் என்று கூறி சென்றனர். ஆடிப்பெரும் திருவிழா நடைபெறும் இந்த சூழலில் இச்சம்பவம் நடைபெற்று வருவது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.