தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர்  தூரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது கைலாய மேலசொக்கநாதர்  ஆலயம். மலைகளின் நடுவில் சுமார் இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு இயற்கை சூழ்ந்த நிலையில் தோன்றிய சிவலிங்க வடிவம் கொண்ட ஒரு ஆலயம் இப்பகுதியில் பிரசித்தி பெற்றதாக உள்ளது.




சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்பு சித்தர்களாலும் மகான்களாலும் தோற்றுவிக்கப்பட்டு வழிபட்டு வந்த தொன்மையான சிவத்தலம் இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகம முறைப்படி இயற்கை சூழல் அமைந்துள்ள இவ்வாலயம் சதுரகிரி வெள்ளியங்கிரி சுருளி மலைக்கு ஒப்பான மறையும் வனமும் சூழ்ந்த இயற்கை தலமாக அமைந்துள்ளது.


Senthil Balaji: பரபரப்பு! செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு! ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி!


திருவண்ணாமலையில் உள்ள சிவாலயம்போலவே  இக்கோயிலும் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ராகு, கேது பரிகாரத்திற்கு சிறந்த காலகஸ்தி போன்று அருகில் நீர்நிலையில் உடன் வாஸ்து முறைப்படி வாயு மூலையில் அமைந்துள்ளது. கிழக்கு முகம் பார்த்து சிவன் வீட்டிலிருந்து போடி நகரைப் பார்த்து அமைந்திருப்பது போலவும் உள்ளது. இந்த ஆலயம் பாரம்பரியமிக்க ஆலயங்களில் மிகத் தொன்மையானதும் முதன்மையானதும் எனக் கூறப்படுகிறது. இந்த ஆலயத்தின் பின்புறத்தில் உள்ள மலைத் தோற்றம் பனி சூழ்ந்த கைலாய மலை போலவே காட்சி அளிப்பது இதன் தனி சிறப்பாகும்.


Coolie: ரஜினிகாந்த் மகளாக நடிக்க மாட்டேன் என்று சொன்ன சீரியல் நடிகை - ஏன்?


இவ் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அமாவாசை பிரதோஷம் சிவராத்திரி நாட்களில் சிறப்பு வழிபாடு சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இன்று ஆடி பௌர்ணமியை முன்னிட்டு சிவாலயத்தில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றன.




Engineering Counselling: பொறியியல் மாணவர்களே.. தயாரா? நாளை தொடங்கும் கலந்தாய்வு


ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சிவனை வழிபட்டு சென்றனர். பக்தர்களுக்கு, பூ ,ருத்ராட்சம் எலுமிச்சை பழம் உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. மேலும் இதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றன பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வந்து அன்னதானத்தில் கலந்து கொண்டு சென்றனர். வனப்பகுதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தன.