சோனு சூட்


விஜயகாந்த் நடித்து 1999ஆம் ஆண்டு வெளியான கல்லழகர் படத்தின் மூலமாக வில்லனாக அறிமுகமானவர் சோனு சூட். தமிழ் இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடித்து வரும் சோனு சூட் உண்மையிலேயே மனிதாபிமானத்திற்காக அறியப்பட்டவர். கொரோனா நோய்த் தொற்று பரவலின் போது சிகிச்சைக்கு தேவையான ஆக்ஸிஜன்  சிலிண்டர் வசதிகள் முதல் பல உதவிகளை மக்களுக்கு செய்தார். சமீபத்தில் டெலிவரி நபர் ஒருவர் ஷூ திருடியதை நியாயப் படுத்தும் வகையில் அவர் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இதனைத் தொடர்ந்து தற்போது அவரது மற்றொரு கருத்து மீண்டும் கரும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. 


அரசின் உத்தரவை எதிர்த்த சோனு சூட்






உத்திரபிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழிதடத்தில் உள்ள உணவகங்களில் உணவு சமைப்பவர் உட்பட இந்த உணவகங்களில் வேலை செய்யும் பணியாளர்களின் பெயர்களை பெயர் பலகையில் குறிப்பிட வேண்டும் என்று முசாஃபர் நகர் காவல் துறை சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த உத்திர பிரதேச அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு இஸ்லாமிய மதத்தினருக்கு எதிரான விளைவுகளை உண்டாக்கும் என எதிர்கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். உத்திர பிரதேச ஆரசின் இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சோனு சூட் தனது எக்ஸ் தளத்தில் கருத்து தெடிவித்திருந்தார். 


’மனிதநேயம்’ என்கிற ஒரே அடையாளம் மட்டும் தான் பெயர் பலகையில் இருக்க வேண்டும் என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நெட்டிசன் ஒருவர் உணவு சமைக்கும் ஒருவர் அதில் எச்சில் துப்பும் வீடியோவை பகிர்ந்து இந்த உணவை சோனு சூட் கொடுங்கள் என்று பதிவிட்டிருந்தார் .


உணவில் எச்சில் துப்பியதை நியாயப் படுத்தினாரா சோனு சூட் ?


இதற்கு பதிலளித்த நடிகர் சோனு சூட் “ராமாயணத்தில் ராமர் சபரி வழங்கிய பழங்களை ஏற்றுக் கொண்டு சாப்பிடவில்லையா. அதே போல் நானும் இந்த உணவை சாப்பிடுவேன்” என்று தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து உணவில் எச்சில் துப்பும் செயலை நியாயப் படுத்தியதாக சோனு சூட்  கருத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் குவிந்து வருகின்றன. நடிகை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான கங்கனா ரனாவத் சோனு சூட் கருத்திற்கு தனது விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.