மே வாட் , பவாரியா போன்ற வட மாநில கொள்ளை கும்பல்கள் தொடர்ந்து தென் மாநிலங்களில் குறி வைக்க தான் செய்வார்கள் ஒரே செல்போன்களை பயன்படுத்த மாட்டார்கள் அவர்களை பிடிப்பது மிகவும் சவாலான ஒன்று எனவும்,  குழந்தைகள் தவறான வழியில் சிக்காமல் இருக்க பெற்றோர் கண்காணிப்பு மிகவும் முக்கியம் என முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி.




திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலா தலமாகும். கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏரி சாலையை சுற்றி குதிரை சவாரி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் கொடைக்கானலில் உள்ள அண்ணா நினைவு குதிரை ஓட்டுநர் முன்னேற்றம் சங்கம் சார்பாக 38 ஆம் ஆண்டு விழா  ஏரி சாலையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, முன்னாள் நகர் மன்ற தலைவர் குரியன் ஆபிரகாம், காவல்துறையினர் உள்ளிட்ட பலரும் இந்த 38 ஆம் ஆண்டு விழாவில் கலந்து கொண்டனர்.


"புத்தர் பிறந்த இடத்தில் இருந்து வருகிறேன்" தென்கிழக்கு ஆசிய மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!




இதில் குதிரை சவாரி மேற்கொள்வது குறித்த முக்கியத்துவமும் உள்ளிட்ட பல்வேறு கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதில் கலந்துகொண்ட முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு அவருடைய காலகட்டத்தில் நடைபெற்ற சவாலான பணிகள் குறித்து பேசினார். குதிரை ஓட்டுநர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சைபர் குற்றங்களை தடுப்பதற்கு தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டு அதனை தமிழ்நாடு காவல்துறையினர் முழுமையாக கண்காணித்து வருவதாகவும் ,


Vijayadashami 2024: விஜயதசமி பண்டிகை! தமிழ்நாடு முழுவதும் நாளை அரசுப்பள்ளிகள் இயங்கும் - எதற்காக?




கஞ்சா போன்ற போதை பொருட்கள் ஒழிந்து வந்தாலும் நவீன போதை பொருட்களை இளைஞர்கள் உபயோகிக்க துவங்கி விட்டனர். மேலும் தங்களுடைய குழந்தைகள் நவீன போதை வஸ்துக்களில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கு பெற்றோர்கள் குழந்தைகளை கண்காணிக்க வேண்டும். சைபர் குற்றங்கள் நடைபெற்றால் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தால் மட்டுமே அந்த குற்றத்தை தடுக்க முடியும். சைபர் குற்றங்களால் தமிழகத்தில் இதுவரை மட்டும் 1100 கோடி ரூபாய் வரை சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெற்று இருப்பதாகவும் சைபர் கிரைம் குற்றங்கள் தான் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.


மாணவர்களின் உயிரை காவு வாங்கும் ஐஐடி.. 28 வயது மாணவி தற்கொலை.. என்னதான் நடக்கிறது?


இதனை தடுப்பதற்கு பொதுமக்களிடையே கடுமையான விழிப்புணர்வுகள் இருந்தால் மட்டுமே சைபர் குற்றங்கள் தடுக்க முடியும் எனவும் வடமாநில கொள்ளையர்கள் ஆன பவாரியா கும்பல் மேவாட் போன்ற கும்பல்கள் தமிழகத்தை குறி வைக்க தான் செய்வார்கள் அவர்கள் ஒரே செல்போனை பயன்படுத்தவோ அவர்களை எளிதில் பிடித்து விடவோ முடியாது அதுபோன்ற கொள்ளையர்களை பிடிப்பது சவாலான ஒன்று என சைலேந்திரபாபு தெரிவித்தார்.