திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற மலைகளின் இளவரசி என அழைக்கப்படும், கொடைக்கானலில் வருடந்தோறும் மாவட்ட நிர்வாகம் சார்பாக கோடை விழா நடைபெறும். இந்த விழாவில் தோட்டக்கலைத்துறை சார்பாகவும், சுற்றுலா துறை சார்பாக மலர் கண்காட்சி  நடத்தப்படும். இந்த நிலையில் தற்போதுமலர் கண்காட்சியை நடத்துவதற்கும், கோடை விழா நடத்துவதற்கு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


GT vs CSK LIVE Score: சீரான ரன் குவிப்பில் குஜராத் டைட்டன்ஸ்; விக்கெட்டுக்கு வியூகம் வகுக்கும் CSK!


கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி மற்றும் கோடைவிழா-2024 ஆகியவை 17.05.2024-ஆம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் இவ்விழாவில் வரும் 17.05.2024 முதல் 26.05.2024 வரை 10 நாட்கள் தோட்டக்கலைத்துறை மூலமாக மலர்க்கண்காட்சியும், 17.05.2024 முதல் 26.05.2024 வரை 10 நாட்கள் சுற்றுலாத்துறை மூலமாக கோடைவிழாவும் நடத்தப்படவுள்ளது.


Akshaya Tritiya 2024: கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நகை வாங்கும் மக்கள்


இவ்விழாவில் 10 நாட்களும் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலைநிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பாரம்பரிய வீர விளையாட்டுகள், படகு அலங்கார அணிவகுப்பு, மீன் பிடித்தல் போட்டி. நாய்கள் கண்காட்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. இவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்க அனைத்து உள்நாட்டு மற்றும் வெளியாட்டு சுற்றுலாப்பயணிகளையும், திண்டுக்கல் மற்றும் அருகிலுள்ள மாவட்ட பொதுமக்களையும் மற்றும் கொடைக்கானல் நகர்ப்பகுதி பொதுமக்களையும், மாவட்ட நிர்வாகம் வரவேற்பதாகவும்,


Arvind Kejriwal Bail: சிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால்! உற்சாக வரவேற்பு தந்த ஆம் ஆத்மி தொண்டர்கள்!


மேலும், நிகழ்ச்சிகள் தொடர்பான விபரங்களுக்கு, சுற்றுலா அலுவலர் சுற்றுலா அலுவலகம், கொடைக்கானல்-624101 என்ற முகவரியில் நேரிலோ, 04542-241675 என்ற அலுவலக தொலைப்பேசி எண் மற்றும் 9176995867 என்ற கைப்பேசி எண் வாயிலாகவோ மற்றும் கொடைக்கானல் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநரை 9092861549 என்ற கைப்பேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி  தெரிவித்துள்ளார்.