அட்சய திரிதியை நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் திருவண்ணாமலையில்  கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள்  நகை வாங்கினார்கள்.


மக்களுக்கு எப்போதும் நகைகள் மீது ஆர்வமே தனி தான். தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என விதவிதமாக ஆபரணங்கள் வாங்குவார்கள். இதனால் நகைக்கடைகள் எப்போதும் வாடிக்கையாளர்களால் நிரம்பும். அதேசமயம் மற்ற நாட்களை காட்டிலும் அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்க மக்கள் போட்டி போடுவார்கள். அதற்கு காரணம் இந்த நன்னாளில் நாம் ஆபரணங்கள் வாங்கினால் அது ஆண்டு முழுவதும் வாழ்க்கை செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.  அதன்படி 2024 ஆம் ஆண்டு அட்சய திரிதியை நாள் இன்று (மே 10) அதிகாலை 4.17 மணிக்கு தொடங்கி நாளை (மே 11) மதியம் 2.50 மணி வரை உள்ளது. அதேசமயம் இந்த இரு நாட்களிலும் நகைகள் வாங்க நல்ல நேரம் காலை 5.45 மணி முதல் மதியம் 12.06 வரை குறிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் நகைகள் வாங்க முடியாதவர்கள் இந்த நாளின் பிற நேரங்களில் வாங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  அட்சய திரிதியை நாளை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள நகைக்கடைகள் அதிகாலையில் திறக்கப்பட்டன. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு அதிரடி ஆஃபர்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களும் இன்று காலை முதல் நகைகள் வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். 


 




வெயிலையும் பொருட்படுத்தாமல் நகை வாங்கும் மக்கள் 


அந்த வகையில் இன்று அக்‌ஷய திரிதியை நாள் முன்னிட்டு திருவண்ணாமலையில் உள்ள திருவுடல் தெரு,  கள்ளகடை மூளை, தேரடி வீதி, கார் தெரு, கட்டபொம்மன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள நகை கடைகள்  காலையிலேயே திறக்கப்பட்டு இருந்தது. காலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அனைவரும் ஆர்வத்துடன் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர். இதனால் எதிர்பார்க்காத அளவு கூட்டம் வந்ததால் நகைக்கடை உரிமையாளர்கள் என்ன செய்வது என்று தெரியாமல், நகை கடைக்கு வரும் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்க்காக, அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, அதன்முலம் நகைகளை பலமணி நேரம் காத்திருந்து வாங்கி சென்றனர். 


 




 


இன்றைய நகையின் நிலவரம் 


இதுமட்டும்யின்றி  திருவுடல் தெரு, கள்ளகடை மூளை ,திரடிவீதியில் வாகனங்கள் சாலையிலேயே நிறுத்திவிட்டு சென்றதால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு கொளுத்தும் வெயிலிலும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து சென்றனர். இன்று திருவண்ணாமலையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.67000 ஆக விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை கிராமுக்கு 78  ரூபாயும்,  ஒரு சவரன் நகை ரூ.53,600 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் வாங்க இயலாதவர்கள், இந்நாளில் கல் உப்பு, பஞ்சு, பருப்பு ஆகியவற்றை வாங்கலாம் என கூறப்படுகிறது. இந்த பொருட்களை வாங்குவதால் வீட்டில் அமைதி, வளம், வளர்ச்சி, மகிழ்ச்சி ஆகியவை நிலைத்து இருக்கும் என நம்பப்படுகிறது.