பழனி அருகே நெய்க்காரபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 7 வயது சிறுவன் முகமது ஹிசாம். இவரது தந்தை அஷ்ரப் அலி வேளாண்துறையில் பணியாற்றி வருகிறார். தாய் சையது ஒலி பாத்திமா இல்லத்தரசியாக உள்ளார். தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் சிறுவன் முகமது ஹிசாம் ஏழு வயதில் மூன்று சாதனைகள் படைத்து பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளான். காய்கள், பழங்கள், விலங்குகள், மலர்களின் அறிவியல் பெயர்களை வரிசைப்படுத்தி நொடிகளில் கூறி சாதனை படைத்துள்ளான் சிறுவன் முகமது ஹிசாம்.
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
பெரியவர்கள் பலரும் அறிந்து மனதில் நிறுத்திக் கொள்ள முடியாதது இந்த அறிவியல் பெயர்கள். ஆனால் சிறுவன் முகமது ஹிசாம் 50 அறிவியல் பெயர்களை 71 வினாடிகளில் வேகமாக கூறி இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் இடம் பிடித்துள்ளார். மேலும் அகர வரிசையில் அறிவியல் பெயர்களை 74 வினாடிகளில் கூறிய ஏற்கனவே மற்றொருவர் செய்திருந்த சாதனையை முறியடித்துள்ளார். மேலும் 55 அறிவியல் பெயர்களை ஒரு நிமிடம் 51 வினாடிகளில் கூறி கலாம் புக் ஆஃப் ரெக்கார்ட் உலக சாதனையாக பதிவு செய்துள்ளது. மேலும் சிறுவனின் திறமையை பார்த்து வேளாண் பல்கலைக்கழகம் பாராட்டி பரிசு வழங்கியுள்ளது. தொடர்ந்து கின்னஸ் உலக சாதனை இடம் பெற முயற்சியில் சிறுவன் மற்றும் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர் .
22 Years Of Dhanush: திறமையில் குபேரா! 22 ஆண்டுகளை நிறைவு செய்த நடிப்பு அசுரன் தனுஷ்!
TVK Vijay:இந்த முறை யாருக்கு என்ன சர்ஃப்ரைஸ்! விஜய் கொடுத்த அப்டேட்! ரெடியாகுங்க மாணவர்களே!
சாதனை சிறுவனை பெற்றோர் மற்றும் உறவினர்கள் பாராட்டி வருகின்றனர். வேளாண் துறையில் பணியாற்றும் தனது தந்தை தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தபோது அருகில் அமர்ந்து கேட்ட சிறுவன் முகமது ஹிசாம் அறிவியல் பெயர்களை மனப்பாடம் செய்து விளையாடும்போதெல்லாம் கூறியதாகவும், சிறுவனிடமிருந்த திறமையை பார்த்து தொடர்ந்து அறிவியல் பெயர்களை சொல்லிக் கொடுத்ததன் மூலம் இந்த சாதனையை நிகழ்த்தியதாக சிறுவனின் தாய் சையது ஒலி பாத்திமா தெரிவித்துள்ளார். மேலும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திறமையை கண்டுபிடித்து ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளுக்கு விளையாட்டுடன் கற்பித்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைப்பதாக தெரிவித்துள்ளார்.