மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர்.


Tamil Thalaivas PKL: புரோ கபடி லீக் - தொடர் தோல்வி, மீண்டு வருமா தமிழ் தலைவாஸ் அணி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு




இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். பல்வேறு பண்டிகை தினங்கள் மற்றும் வார விடுமுறை என தொடர் விடுமுறை நாட்களில் கொடைக்கானலுக்கு  அதிகமாக சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு.


Watch Video : அந்த அருவிப்போல் அன்பத் தருவாளே.. சந்தோஷ் நாராயணன் கான்சர்ட்டில் சித்தார்த் குரலில் உனக்குத்தான் பாடல்..




குறிப்பாக கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருவார்கள். இந்தநிலையில் தற்போது கொடைக்கானல் சுற்றுலா தளங்களில் கேரளா பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது. மேலும் கடும் பனி மூட்டத்தால் மலை சாலைகள் மறைந்துள்ளது.  ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருவார்கள்.


TN DSP Transfer: தமிழ்நாட்டில் 35 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் - டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவு




குறிப்பாக கோடை காலத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தாலும் இரண்டாம் சீசன் துவங்கி தற்போது நடைபெற்று வருவதால் கொடைக்கானலில் நிலவும் சீதோசன நிலையை அனுபவிக்க கொடைக்கானலுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை புரிவர் . ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் புயல் மற்றும் கன மழையால் கடந்த இரண்டு வாரங்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்திருந்த நிலையில்  அரையாண்டு தேர்வு, விடுமுறை, கிறிஸ்துமஸ், மற்றும் புத்தாண்டு ஆகிய தொடர் விடுமுறை நாட்கள் வருவதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவியத் துவங்கியுள்ளனர்.


Covid JN.1 variant: அதிதீவிரமாக பரவும் புதிய கொரோனா ஜேஎன்.1 வேரியண்ட்- பாதிப்பு என்ன? எச்சரிக்கும் எய்ம்ஸ் முன்னாள் இயக்குனர்




மேலும் கடந்த ஒரு வார காலமாக கொடைக்கானலில் தொடர் மழை இருந்த நிலையில் தற்போது வறண்ட வானிலை நிலவி வருவதால் இயற்கை காட்சிகளான தூண்பாறை , பைன் மர காடுகள், குணா குகை உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை காட்சிகள் ரம்யமாக தெரிகிறது. மேலும் பகல் நேரங்களில் இருக்கக்கூடிய வெயிலில் அதிகளவில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து வருகின்றனர்.