உனக்கு தான்


சித்தார்த் நடித்து அருண் குமார் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் சித்தா. திபு நினன் தாமஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்தார், நிமிஷா சஜயன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள சித்தா படத்தின் பாடல்களும் அதே அளவிற்கு மக்களின் மனதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக  ’உனக்குதான்’ பாடல் இணையதளத்தில் மிகப்பெரிய அளவில் வைரலாகி உள்ளது. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், கவர் சாங், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என எங்கு பார்த்தாலும் இந்தப் பாடல்தான் இசைக்கப்கிறது . சந்தோஷ்  நாராயணன் பாடிய இந்தப் பாடலை ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் தனுஷ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஏ ஆர் ரஹ்மான் என அனைவரது குரலிலும் கற்பனை உருவாக்கம் செய்யப் பட்டது. 


சித்தார்த் குரலில்


 வெகு அரிதாக திரைப்படங்களில் பாடி வருபவர் நடிகர் சித்தார்த் . சந்தோஷ் சுப்ரமணியன் படத்தில் அடடா அடடா, தரமணி படத்தில் உன் பதில் வேண்டி, ஜில் ஜங் ஜக் படத்தில் ஷூட் த குருவி என தனித்துவமான சில பாடல்களை சித்தார்த் பாடியுள்ளார். இப்படியான நிலையில் உனக்குதான் பாடலை சித்தார்த் பாடியுள்ள வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தற்போது இலங்கையில் நடந்து நடந்து வரும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இந்தப் பாடலை பாடியுள்ளார். இதுவரை கேட்டிராத ஒரு புது அனுபவமாக இருக்கிறது.