மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை ஓய்ந்ததால் கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீரானது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கி சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே பெரியகுளத்தில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையின் சூழலில் வனத்துறையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளதுதான் கும்பக்கரை அருவி. இந்த கும்பக்கரை அருவிக்கு வருடத்தின் பெரும்பாலான நாட்களில் நீர் வரத்து இருப்பதால் தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளித்து செல்வது வழக்கம்.
Bonda Mani: 'போண்டா’ மணியாக மாறிய கேத்தீஸ்வரன்.. பலரும் அறியாத அவரின் சினிமா பயணம்!
இந்நிலையில் கடந்த ஒரு சில நாட்களாகவே மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்ததால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்புக் கருதி தேவதானப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
தற்போது மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் வெள்ள வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு பெரியகுளம் தேவாரப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் அனுமதி அளித்து அறிவித்துள்ளார். இதனால் தேனி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களிலிருந்தும் மாநிலங்களிலிருந்தும் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு பெரும் அளவில் குளிப்பதற்காக வந்து செல்கின்றனர். மேலும் கும்பக்கரை அறிவிப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதோடு, மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இருந்து வருகிற நீரின் அளவு உள்ள தேவைகளை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கண்காணிக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இதுகுறித்து தேவாரப்பட்டி வனச்சரகர் டேவிட் ராஜன் கூறுகையில், "மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் கன மழை பெய்ததால் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்து அறிவித்திருந்த நிலையில், தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து வருகிற நீரின் அளவு சீராக இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிப்பதற்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுற்றுலா சுற்றுலா பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் வகையில் வனத்துறை ஊழியர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பகுதியில் இருந்து வருகிற நீரின் அளவு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் எந்த ஒரு அச்சமும் இன்றி அறிவிப்பகுதியில் குளித்து செல்ல முழு வீச்சில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என கூறினார்.