திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலின் இயற்கை அழகினை கண்டு ரசிக்க தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு வெளிமாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர் , தொடர் விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் இங்கு நிலவும் குளிர், மிதமான வெப்பம், மழை உள்ளிட்ட காலநிலையை பெரும்பாலனோரை ரசிக்க வைக்கிறது,
போதைப் பழக்கத்திற்குள்ளானவர்கள் கஞ்சா மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மட்டுமே விற்கப்படும் போதை காளான் (மேஜிக் மஷ்ரூம்) விற்பனையும், அதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் தற்பொழுது அதிகரித்துள்ளது. சுற்றுலா வரும் வெளிமாநில இளைஞர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து இந்த போதை காளான் அதிகமாக விற்கப்பட்டு வருகிறது. இதற்கு இன்னொரு பெயர் மேஜிக் மஷ்ரூம் ( தாவிரவியல் பெயர் சைலோசைபி) என்றும் இதை உட்கொள்ளுபவர்களுக்கு நீண்ட நேர போதை ஏற்படுவதாக கூறி பெரும்பாலும் கொடைக்கானலுக்கு வரும் இளைஞர்கள் இந்த போதை காளான் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர்.
Exit Poll Results 2023 LIVE: 5 மாநில தேர்தல் முடிவுகள்! எக்சைட் போல் முடிவுகள் சொல்வது என்ன?
இந்த நிலையில் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து போதை காளான் என்ற மேஜிக் மஸ்ரூம் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. குறிப்பாக வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர்களை, இளைஞர்களை குறி வைத்து இந்த போதை காளான் விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. பல லட்சம் ரூபாயும் புழங்கி வருகிறது. மேல்மலை பகுதிகளில் தனியார் தங்கும் விடுதிகள், அனுமதி அற்ற பகுதிகளில் போதை காளான் பேக்கேஜ் என்ற தங்கும் வசதியும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொடைக்கானலில் இருந்து வெளி மாநிலங்களான கர்நாடகா, கேரளா ,
விழுப்புரம் அருகே அரசு பள்ளியில் மது போதையில் மாணவர்கள் ரகளை - அரசை எச்சரிக்கும் ராமதாஸ்
ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கொரியர் மூலம் போதை காளான் சப்ளை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கொடைக்கானல் போலீசார் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபடுவர். இதனை மீறியும் கொடைக்கானலில் இருந்து வெளி மாநிலங்களுக்கு போதை காளான் கொரியர் மூலமாக அனுப்பி விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதில் கொரியர் மூலம் அனுப்பி வந்த நான்கு பேரை காவல்துறையினர் கடந்த வாரம் கைது செய்து சிறையில் அடைத்தனர் . இந்த வழக்கில் தலைமறைவாகி இருந்த ஹெலன் மேரி என்பவரை கொடைக்கானல் காவல்துறையினர் இன்று கைது செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர் . தொடர்ந்து கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து போதை காளான் விற்பனை செய்து வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்