Exit Poll Results 2023 LIVE: ராஜஸ்தானில் பறக்கப் போது பா.ஜ.க. கொடி! காங்கிரசுக்கு பின்னடைவு!
Exit Poll Results 2023 LIVE: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்க சட்டமன்ற தேர்தலுக்காக எக்சைட் போல் விவரங்களை கீழே உடனுக்குடன் காணலாம்.
ABP NADU Last Updated: 30 Nov 2023 07:14 PM
Background
நாடு முழுவதும் அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றுள்ள சட்டசபை தேர்தல்களுக்கான முடிவுகள் வரும் 3ம்...More
நாடு முழுவதும் அடுத்தாண்டு மக்களவைத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில், 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றுள்ள சட்டசபை தேர்தல்களுக்கான முடிவுகள் வரும் 3ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இன்று தெலங்கானா மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.ஏற்கனவே நிகழ்ந்த கருத்துக்கணிப்பின்படி, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றும், ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சியை கைப்பற்றும், சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்றும், மிசோரமில் மிசோரம் தேசிய முன்னணி கைப்பற்றும் எனவும், தெலுங்கானாவில் இழுபறி நீடிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
ராஜஸ்தானில் பறக்கப் போது பா.ஜ.க. கொடி! காங்கிரசுக்கு பின்னடைவு!
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 199 தொகுதிகளில் 94 முதல் 114 தொகுதிகள் வரை கைப்பற்றி பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் எனவும், தற்போது ஆளுங்கட்சியான காங்கிரஸ் 71 முதல் 91 தொகுதிகள் வரை மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழக்கும் என கருத்தக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.