கொரோனா காலகட்டம் பலரின் வாழ்க்கையை திருப்பி போட்டது. ஆனால் அதன் மூலம் ஒரு துறை வளர்ச்சி அடைந்தது என்றால் அது ஓடிடி தளங்களாக தான் இருக்கும். திரையரங்கம் சென்று படங்களை பார்க்க வேண்டும் என்றிருந்த நிலை மாறி, குடும்பத்துடன் வீட்டிலேயே உட்கார்ந்து நேரம் கிடைக்கும்போது பார்க்கும் வசதி பெரும்பாலானவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வீட்டிலேயே முடங்கிப் போய் இருந்த மக்களுக்கு இந்த ஓடிடி தளங்கள் மிகுந்த ஆறுதலை கொடுத்தது எனலாம். 


திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு திரையரங்குக்கு பின்னரும் படத்தை மக்களிடம் எளிதில் கொண்டு சேர்க்க முடிந்தது வரப்பிரசாதமாக அமைந்தது. அது மட்டுமின்றி ஓடிடி தளங்களுக்கேனே தனியாக படங்களும், இணைய தொடர்களும் உருவாக்க முன்வந்தனர். இந்த ட்ரெண்ட் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. 


அந்த வகையில் டிசம்பர் முதல் வாரத்தில் என்னென்ன திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.


 


 


மிஷன் ராணி கஞ்ச் :  


1988 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கபட்டுள்ள திரைப்படம் 'மிஷன் ராணி கஞ்ச்'.  ரானி கஞ்ச்சில் நில சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்ததால் அதற்குள் சிக்கிக் கொண்டவர்கள் எப்படி மீட்கப்பட்டார்கள் என்பது தான் படத்தின் கதைக்களம். அக்ஷய் குமார், பரினிதி சோப்ரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.


தூதா :


நாக சைதன்யா, பிரியா பவானி ஷங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் தூதா திரைப்படம், அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நாளை  ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. 


ஸ்வீட் ஹோம் சீசன் 2: 


கொரியன் வெப் சீரிஸ்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் ஏற்கனவே வெளியான ஸ்வீட் ஹோம் வெப் சீரிஸ் நல்ல வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாவது சீசனை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. முதல் சீசன் போலவே இரண்டாவது சீசனுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 



இண்டியான ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி : 


 
இண்டியான ஜோன்ஸ்  மற்றும் அவரது பேத்தியின் செயல்பாடுகளை வைத்து வெளியாக உள்ள திரைப்படம் 'இண்டியான ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி ' நாளை முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.