வானில் நிகழும் அரிய நிகழ்வு வால் நட்சத்திரங்கள். நீள் வட்ட பாதையில் அவை பயணிப்பதால் அவை சூரியனை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கடந்து செல்லும். அப்போது அவை பூமியில் மனிதர்களின் கண்களுக்கு புலப்படும். இதுவரை 6500-க்கும் மேற்பட்ட வால் நட்சத்திரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நிலையில் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பின்னர் பூமிக்கு மிக அருகில் C2022e3 ZTF என்ற மிக அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது.


Murali Vijay Retirement: க்ளாஸான கவர் டிரைவ்.. ஸ்டைலிஷ் பேட்ஸ்மேன்.. சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வை அறிவித்தார் முரளி விஜய்!




அமெரிக்காவில் உள்ள வானியல் ஆய்வு மையத்தால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது. இது தற்போது சூரியனை கடந்து வந்து கொண்டிருக்கிறது 50,000 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வால் நட்சத்திரம் பூமியை கடந்து செல்லவருகிறது. ஜனவரி 30,31 மற்றும் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் பூமிக்கு மிக அருகில் அதாவது கிட்டத்தட்ட 4 கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பால் பூமியை இந்த வால் நட்சத்திரம் கடந்து செல்லும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Erode East Bypoll 2023: என் மகன் விட்டுச்சென்ற பணியை தொடர வாய்ப்பளியுங்கள்.. ஈரோட்டில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு!




பரோட்டா சாப்பிட்டுவிட்டு படுத்து உறங்கிய இளைஞர் உயிரிழப்பு... சென்னையில் அதிர்ச்சி! என்ன நடக்கிறது?


பூமியை நெருங்கும் போது வினாடிக்கு சுமார் 57 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் வடக்கு திசையில் சூரியனின் மறைவுக்கு பிறகு வால் நட்சத்திரத்தை பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூமியை கடந்து செல்லும்போது இரவில் வெறும் கண்ணாலும் பகலில் மற்றும் தொலைநோக்கிகள் மூலமும் பார்க்க முடியும். அதிக பிரகாசமாக இருந்தால் தெளிவாகவே வெறும் கண்ணால் கூட பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும், கொடைக்கானலில் மேக மூட்டம் அந்த தேதிகளில் இருப்பதால் கொடைக்கானலில் இருந்து பார்க்க முடியாது எனவும் தொலைநோக்கிகள் மூலம் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண