திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞரான வடிவேல் என்பவர்  சிலம்பம் கற்று கொண்டு கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆஞ்சேநேயர் சிலம்பம் பயிற்சி கூடம் என்ற பெயரில் கடந்த 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். மேலும் இந்த பயிற்சி கூடத்தில் 1-ஆம் வகுப்பு  முதல் கல்லூரி படிக்கும் மாணவ மாணவர்கள் என 400-க்கும் மேற்பட்டவர்களுக்கு  சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறார். இதில் குறிப்பாக  சிலம்பம், வாள் வீச்சு, பிச்சுவா, கத்தி சண்டை, மான் கொம்பு உள்ளிட்ட கலைகளை கற்று தருகிறார்,


China Plane Crash Video: சீனாவில் வெடித்து சிதறிய விமானம்... கிளம்பிய புகை.. பதைபதைக்கும் வீடியோ காட்சி!




இந்நிலையில் தமிழர் பாரம்பரியமான தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பத்தை அனைத்து மக்களுக்கும் தெரியும் வண்ணமாக இன்று தனியார் மைதானத்தில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களது கண்களை கருப்பு துணியினால்  மூடி கொண்டு  சிறிய தட்டில் டம்ளர் ஒன்றை வைத்து அதில் தண்ணீர் ஊற்றி அதனை கீழே விழாமல் சுற்றியும், அதே போல  இரண்டு கைகளில் சிலம்பம் சுற்றியும் புதிய சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். இதில் தொடர்ந்து இடைவிடாமல்  2022 வினாடிகளில் சுற்றி புது முயற்சியில் ஈடுபட்டனர், அப்போது அங்கிருந்த மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களின் விடாது முயற்சிக்கு கைத்தட்டி உற்சாகப்படுதினார்கள்.




இவர்களை அங்கீகரிக்கும்  வகையில் நோபல் வேர்ல்ட் ரெக்கார்டஸ் நிறுவனத்தினர் வருகை புரிந்து மாணவர்களின் தனி திறன் மற்றும் வேகம் உள்ளிட்டவை கண்காணிக்கப்பட்டு இவர்களது சாதனை முயற்சியை அங்கீகரித்துள்ளனர். மேலும் போட்டியில் பங்குபெற்ற 70 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு  நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டியுள்ளனர், 




மேலும் இந்நிகழ்ச்சியில் கொடைக்கானல் கோட்டாட்சியர் முருகேசன், நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் பலரும் கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள், மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவியர்கள் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், தண்ணீர் சுற்றுதலில் ஈடுபட்டு சாதனை புரிந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,மேலும் இது போன்ற பாரம்பரிய விளையாட்டில் உலகளவில் புதிய சாதனை புரிவதும் தங்களது லட்சியம் எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.


OPS Statement: “என்னென்ன சிகிச்சைகள் வழங்கப்பட்டன என எனக்கு தெரியாது” - ஓபிஎஸ் வாக்குமூலம்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண