சீனாவில் 133 பேருடன் சென்ற விமானம் விமானம் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. சீனா குவாங்ஸி மாகாணத்தில் இருந்து சென்ற போயிங் 737 ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குன்மிங் பகுதியில் இருந்து குவாங்க்ஸோ நோக்கி சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மலையில் விழுந்து நொறுங்கிய விமானத்தில் பயணித்த 133 பேரின் நிலை குறித்து தெரியவில்லை.


133 பேரை ஏற்றிச் சென்ற போயிங் 737 ரக விமானம் சீனாவில் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கியதில், அந்த இடத்தில் இருந்து புகை மூட்டத்துடன் காணப்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில், அந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 






குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்குப் பறந்து கொண்டிருந்த விமானம் குவாங்சிக்கு மேலே “விபத்து” ஏற்பட்டதாக சீன அரசு தொலைக்காட்சி கூறுகிறது. சம்பவத்தின் போது சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 133 பயணிகள் இருந்ததாகவும், அதில் பயணித்த நபர்களின் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவில்லை. தற்போது, மீட்பு பணிக்குழு மலைப்பகுதிக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுப்பட்டு வருகிறது. 


குவாங்சி அவசரகால மேலாண்மைத் துறை ஒரு அறிக்கையில் கூறியது: “சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸில் இருந்து 133 பேருடன் சென்ற போயிங் 737 பயணிகள் விமானம் குவாங்சியில் உள்ள வுஜோவ், டெங் கவுண்டியில் விபத்துக்குள்ளானது மற்றும் மலைத் தீ ஏற்பட்டது.






"தற்போது, மீட்புக் குழுக்கள் ஒன்று கூடி நெருங்கிவிட்டன, மேலும் உயிரிழப்புகள் தெரியவில்லை." எனத் தெரிவித்துள்ளது. இதுகுறித்த ஒரு காணொளி இணையத்தில் பகிரப்பட்டது. 


ட்விட்டரில் பகிரப்பட்ட படங்கள் உள்ளூர் மக்களால் கண்டுபிடிக்கப்பட்ட விமானத்தின் உடற்பகுதியின் பெரிய துண்டுகள் என்று கூறப்பட்டு வருகிறது.  ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க் இதுகுறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் #MU5735 a Boeing 737-89P (B-1791) குன்மிங்கில் இருந்து சீனாவின் குவாங்சோவுக்குச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளானதாக பல உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண