விருதுநகர் அருகே ராமசாமிபுரத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி என்பவரின் மகள் சோலை மீனா (22) விருதுநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் பரங்கிநாதபுரம் தெருவை சேர்ந்த எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் பிரவீன் குமாரும் (26) காதலித்து வந்துள்ளனர். இது தொடர்பாக சோலை மீனாவுடன் மருத்துவமனையில் வேலை செய்த பெண்கள் பிரச்சினை செய்ததாக கூறப்படுகிறது. மனமுடைந்த சோலைமீனா நேற்று பட்டம்புதூர் அருகே திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். தனது இறப்பிற்கு காரணம் யாரும் இல்லை என கடிதமும் எழுதி வைத்துள்ளார்.
காதலி சோலை மீனா தற்கொலை செய்து கொண்டதை அறிந்த காதலன் பிரவீன்குமார், விருதுநகர் என்ஜிஓ காலனி அருகில் உள்ள தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த குருவாயூர் ரயில் முன்பு விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட அவர் விருது நகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மதுரை செல்லும் வழியில் திருமங்கலம் அருகே சென்று கொண்டிருந்தபோது பிரவீன் குமாரின் உயிர் பிரிந்தது. பின்னர் பிரேத பரிசோதனைக்கக மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரவீன் குமார் உடல் கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து விசாரணை செய்த போலிசார் பிரவீன் குமார் சோலை மீனாவின் இறப்பிற்கு காரணமாக 3 பேரை குறிப்பிட்டு ஒரு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதனடிப்படையில் எதன் காரணமாக சோலை மீனா தற்கொலை செய்துகொண்டார், சோலை மீனாவின் காதலன் பிரவீன் குமார் எழுதிய கடிதத்தின் உண்மை என்ன என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Crime : பொள்ளாச்சி பாணியில் கொடூரம்.. திமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்