போடி புத்தடியில் ஒரு கிலோ ஏலக்காய் அதிகபட்சமாக  ரூ. 2395 ஏலம் போனது

கேரளாவில் தொடர் மழையால் ஏலக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் இனி வரும் நாட்களில் ஏலக்காய் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் , ஏலக்காய் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

கேரளாவில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படும் ஏலக்காய், நறுமண பொருட்களில் ஒன்றாகும். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் சுமார் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இந்த ஏலக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாயத்தில் பெரும்பாலும் தமிழக தோட்ட தொழிலாளர்களை ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிலோ வரை ஏலக்காய் வர்த்தகம் என்பது நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

Continues below advertisement

ஜம்மு காஷ்மீர் தேர்தல் வெற்றி: இது தொடக்கம்தான் - இந்தியா கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்


இந்த விற்பனையானது கேரள மாநிலம் புத்தடி மற்றும் தேனி மாவட்டம் போடியில் உள்ள நறுமணப் பொருள் வாரியத்தில் ஆன்லைன் மூலம் ஏல முறையில் விற்பனை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இரு முறை ஆன்லைன் மூலம் ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் போடி, தேவாரம், கோம்பை, கம்பம், குமுளி கட்டப்பனை மற்றும் தமிழகத்தின் இதர வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலக்காய்களை கொள்முதல் செய்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதி மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது.

TN Rain Updates: மக்களே தயாரா..! 10 மாவட்டங்களில் இன்று வெளுக்கப் போகும் கனமழை - வானிலை மையம் எச்சரிக்கை


தற்போது வடகிழக்கு பருவ மழை ஆரம்பமாகி உள்ளது. மேலும் கடந்த சில தினங்களாக பருவ மழையின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக ஏற்றுமதி வர்த்தகம் குறைவாலும் சென்ற மாதம் வரை ஏலக்காய் வர்த்தகம் குறைந்திருந்தது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் அதிகளவில் மழை பெய்ய துவங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு மழை  எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் ஏலக்காய் விவசாயத்தில் பரமரிப்பு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

ஹரியானா தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்: ஜம்மு காஷ்மீர் தோல்வி குறித்து சொன்னது என்ன தெரியுமா?

மேலும் தொடர் மழையால் ஏலக்காய்கள் கொள்முதல் செய்வதில் கடுமையான சிக்கலும் ஏற்பட்டது. இதனால் சென்ற மாதம் வரை ஏலக்காய் வர்த்தகம் குறைந்திருந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவ மழையும் ஆரம்பித்த சில நாட்களிலேயே கொட்டி தீர்த்த மழையின் எதிரொலியால் ஏலக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.


தற்போது ஒரு கிலோ ஏலக்காய் அதிகபட்சமாக  ரூபாய் 2395க்கும் குறைந்த பட்ச ஏலமாக ருபாய் 1898க்கும் என ஏலம்போனது. கேரளாவில் தொடர் மழையால் ஏலக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் இனி வரும் நாட்களில் ஏலக்காய் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அதே போல ஏலக்காய் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Continues below advertisement