மத்திய பாஜக அரசு அநியாயமாக பறித்த ஜம்மு காஷ்மீரின் கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான ஆணை இது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


ஜம்மு காஷ்மீர் தேர்தல்:


ஜம்மு காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தல் போன்ற காரணங்களால், ஜம்மு & காஷ்மீர் சட்டமன்ற தேர்தல் மிகுந்த கவனத்தை ஏற்படுத்தியது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 3 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பதிவாகியுள்ள வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.


ஆரம்பகட்டத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் இழுபறி நிலவியது. இருப்பினும், பிற்பகலில் காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையானதை காட்டிலும் கூடுதல் தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் , தேசிய மாநாட்டு கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்த இந்தியா கூட்டணியானது 49 தொகுதிகளிலும், பாஜக 29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயக கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 








இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியா கூட்டணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது ” அமோக வெற்றி பெற்ற ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கும் JKNC-INC கூட்டணிக்கும் வாழ்த்துகள்! இது, இந்தியாவிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றியை விட அதிகம்.மத்திய பாஜக அரசு அநியாயமாக பறித்த ஜம்மு காஷ்மீரின் கண்ணியம் மற்றும் மாநிலத்தை மீட்டெடுப்பதற்கான அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான ஆணை இது. 



இந்த தருணம் ஒவ்வொரு காஷ்மீர் மக்களின்  நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 


Also Read: ஹரியானா தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்: ஜம்மு காஷ்மீர் தோல்வி குறித்து சொன்னது என்ன தெரியுமா?