பண்டிகை கால சிறப்பு ரயில்  மற்றும் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது குறித்த தகவல்கள் முழுமையாக் படிக்கவும்.

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

 

ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 100 பேருந்துகளும், பல்வேறு இடங்களுக்கு 170 பேருந்துகளுக்கு இயக்கப்படவுள்ளது. 13.10.2024 ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகை முடிந்து திருப்ப ஏதுவாக மதுரை கோட்டத்திலிருந்து சென்னை கிளாம்பாக்கத்திற்கு 110 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. அதே போல் கோயபத்தூர், திருச்சி என ஏராளமான இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்து வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாடு அரசு விரை போக்குவரத்து கழகத்தின் https;//www.tnstc.in.& TNSTC cmobileapp அல்லது இணையதளம்  மூகம் முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் ரயில்வே நிர்வாகம் சார்பில் சிறப்பு ரயில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 







 





Special Trains will be operated in Tambaram Coimbatore Sectors to clear extra rush of passengers during Puja, Diwali and upcoming Festival as detailed below:


 





நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை விடுமுறை கால கூட்ட நெரிசலை சமாளிக்க தாம்பரத்தில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழனி  வழியாக கோயம்புத்தூருக்கு ஒரு  சிறப்பு ரயில் இயக்க

தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி  தாம்பரம் - கோயம்புத்தூர் சிறப்பு ரயில் (06184) அக்டோபர் 11, 18, 25, நவம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய   வெள்ளிக்கிழமைகளில் தாம்பரத்திலிருந்து மாலை 06.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.10 மணிக்கு கோயம்புத்தூர் சென்று சேரும்.

 


Special Trains between Tambaram and Coimbatore

 


மறு மார்க்கத்தில் கோயம்புத்தூர் - தாம்பரம் சிறப்பு ரயில் (06185) அக்டோபர் 13, 20, 27, நவம்பர் 3, 10, 17, 24, டிசம்பர் 1 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்புத்தூரில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரி புலியூர் சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். 

 

AC Tier Coach - Sleeper Class Coaches

 

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2  குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள்,   2 இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள்  ஆகியவை இணைக்கப்படும். ‌இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.