ஹரியானா தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்: ஜம்மு காஷ்மீர் தோல்வி குறித்து சொன்னது என்ன தெரியுமா?

PM Modi Speech: விவசாயிகளையும், தலித்துகளையும் வைத்து அரசியல் செய்ய காங்கிரஸ் முயற்சி செய்தது, ஆனால் அதற்கு தகுந்த பதில் கிடைத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சித் தொண்டர்களிடையே பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார்.

Continues below advertisement

ஹரியானா தேர்தல்: பிரதமர் பெருமிதம்:

பிரதமர் மோடி பேசியதாவது “  ஹரியானாவில் கட்சி தொண்டர்கள், ஜே.பி.நட்டா, முதல்வர் நயாப் சிங் சைனி ஆகியோரின் கடின உழைப்பால் கிடைத்த வெற்றி இது. ஹரியானா மக்கள் சரித்திரம் படைத்துள்ளனர். ஹரியானா 1966 இல் உருவாக்கப்பட்டது. ஹரியானாவில் இதுவரை 13 தேர்தல்கள் நடந்துள்ளன.  ஆனால் இந்த முறை ஹரியானா மக்கள்,, முதல் முறையாக, ஹரியானாவில் தொடர்ந்து 3வது முறையாக ஒரு அரசு அமைக்கும் சரித்தரத்தை படைத்துள்ளனர்.

 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தலித்துகள் வாழ்வதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை காங்கிரஸ் வழங்கவில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை இந்தியாவின் பிரதமராக ஆக்குவதை காங்கிரஸ் "ஒருபோதும் அனுமதிக்காது"  "தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக காங்கிரஸ் பல கொடுமைகளை செய்துள்ளது.   ஒரு தலித் அல்லது பிற்படுத்தப்பட்டவர் இந்தியாவின் பிரதமராக வருவதற்கு காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது, ஏனெனில் காங்கிரஸ்' குடும்பம் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஆதிவாசிகளை வெறுக்கிறது  என தெரிவித்தார். 

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரில் அமைதியான தேர்தல் நடத்தப்பட்டு, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன, இது இந்திய அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் வெற்றி. ஜம்மு-காஷ்மீர் மக்கள் தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பை வழங்கியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் வாக்கு சதவீதத்தைப் பார்த்தால்,  பாஜக மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது என பிரதமர் மோடி தெரிவித்தார். 

ஹரியானா தேர்தல் முடிவுகள் 2024:


ஜம்மு காஷ்மீர் தேர்தல் முடிவுகள் 2024:




Continues below advertisement