சிவகங்கை மாவட்டம் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி II மற்றும் தொகுதி II A -தேர்விற்கான முதன்மைத் தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள் சிவகங்கை படிப்பு வட்டத்தில் நடத்தப்படவுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.

 

TNPSC, TNUSRB, மற்றும் TRB போன்ற தேர்வுகளுக்கான பயிற்சி

 

”சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இத்தன்னார்வ பயிலும் வட்டம் மூலம் நடத்தப்படும் பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 500-ற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், அதிக அளவிலான மாணவ, மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாய்ப்பினைப் பெற்றுள்ளனர். மேலும், பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத் தன்னார்வ பயிலும் வட்ட நுாலகத்தில், இத்தேர்வுக்கான புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இத்துறையின் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் அனைத்துப் போட்டித்தேர்வுகளுக்கான பாடக்குறிப்புகள் மற்றும் முந்தைய வருட வினாத்தாள்கள் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மெய்நிகர் கற்றல் இணையதளத்தையும் வேலைநாடும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

10.10.2024 முதல் பயிற்சி நடத்தப்படவுள்ளது.

 

தற்போது, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணித்தேர்வு - தொகுதி - ll மற்றும் தொகுதி - ll  A (TNPSC GROUP II & IIA) தேர்விற்கு துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் நிலை ll  உள்ளிட்ட 2,327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 20.06.2024 அன்று வெளியிடப்பட்டு, அத்தேர்விற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த 14.09.2024 அன்று நடைபெற்றது. மேலும், தொகுதி II மற்றும் தொகுதி II A தேர்விற்கான முதன்மைத் தேர்விற்கு (TNPSC GROUP II & IIA Mains) இலவசப் பயிற்சி வகுப்புகள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு வருகின்ற 10.10.2024 முதல் நடத்தப்படவுள்ளது.

 

அரசு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையலாம்

 

இப்பயிற்சி, வகுப்புகளில் அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரித்தேர்வுகளும் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் https://forms.gle/4LpXCBhrGgS5DLyw7 6 Google Link- அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டோ பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ளலாம். எனவே, இப்பயிற்சி வகுப்புகளில் அதிக அளவிலான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று, அரசு வேலைவாய்ப்பினை பெற்று பயனடையலாம்” என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தெரிவித்துள்ளார்.