தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைத்தது முதல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் எம்.எல்.ஏ.வாக மட்டுமே தொடர்ந்து வந்தார். இந்த நிலையில், சுமார் 17 மாத தி.மு.க. ஆட்சிக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பு ஏற்றுள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், முக்கிய அமைச்சர்கள் பலரது துறைகளும் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவருக்கு திமுகவினரும், அவரது நண்பர்களும், அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உதயநிதியை கிண்டல் செய்யும் வகையில் மதுரை மாநகர் முழுவதிலும் பா.ஜ.க., சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஓ.பி.சி., பிரிவு மாநில செயற்குழு உறுப்பினர் சங்கரபாண்டி என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில்..
தமிழகத்தின் அமைச்சராக பதவியேற்கும் உபிஸ்களின் சின்னவர் உதயநிதி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் எனவும் மக்களின் வரிப்பணம் ஒரு கோடியே பதினான்கு இலட்சம் செலவு செய்து மெரினா கடற்கரையில் இவர் திறந்து வைத்த மாற்றுத்திறனாளிகளின் மரப்பாதை வெறும் 13 நாட்களின் புயல் வருவதற்கு முன் வீசிய காற்றில் மரப்பாதை இடிந்து போன சாதனையை செய்து திமுக ஊழல் அமைச்சரவையில் இடம்பெறும் ப்ளே பாய்க்கு வாழ்த்துக்கள் என்றும் மெரினா மரப்பாதை மூலம் வைகை தெர்மாகோல் சாதனையை முறியடித்த சின்னவருக்கு வாழ்த்துக்கள் எனவும் கலாய்க்கும் வகையில் வார்த்தைகளை அச்சிட்டு ஒட்டியுள்ளனர்.
மேலும் படிக்க : Minister Udayanidhi Stalin: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பு அதிகாரிகள், உதவியாளர்கள் 5 பேர் நியமனம்; யார், யார்?- விவரம்
மேலும் படிக்க: Minister Udhayanidhi Stalin: ’இனி திரைப்படங்களில் நடிக்கமாட்டேன்.. மாமன்னன் திரைப்படம்தான் கடைசி’ - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்