1. மூலப்பொருள்கள் விலையேற்றம், வெளிநாட்டு தீப்பெட்டி தேக்கம் போன்ற பிரச்னைகளால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சந்தித்து வந்தாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெண் தொழிலாளர்களுக்கு 12 சதவீதமும், ஆண் தொழிலாளர்களுக்கு 15 சதவீதமும் போனஸ் அளிக்க முடிவு செய்துள்ளதாகவும், மேலும் தீபாவளிக்கு பின்னர் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளதாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
2. தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய காலத்திற்குள் நிலுவையின்றி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவரின் 114 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 59 ஆவது குருபூஜை விழா இன்று (வியாழக்கிழமை) தொடங்கி நாளை மறுநாள் வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.
4. வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி உள்ள நிலையில் தனுஷ்கோடி பகுதியில் சூடை மீன்கள் அதிக அளவில் கிடைத்தன. எதிர்பார்த்த விலை இல்லாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
5. சிவகங்கை அருகே இந்திரா நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (60). இவரது வீட்டில் நேற்று பிற்பகல் திடீரென எரிவாயு வெளியேறி சமையல் காஸ் சிலிண்டரை ரெகுலேட்டருடன் பொருத்தினார். அப்போது தீப்பிடித்தது. சிலிண்டர் வெடித்ததில் தங்கராஜ், அவரது வீட்டுக்கு முன் விளையாடிக் கொண்டிருந்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரபுவின் மகள் காருண்யா (1) ஆகியோர் காயம் அடைந்தனர்.
6. சிவகங்கை காரைக்குடியில் போக்குவரத்துக் கழக மேலாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து, அரசு பேருந்துகளை இயக்காமல் ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
7. நெல்லையில் இன்ஸ்பெக்டர் திட்டியதால் எஸ்.ஐ., பழனி 52, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருநெல்வேலியில் 30க்கும் மேற்பட்ட போலீசார், பணி அழுத்தம் காரணமாக விருப்ப ஓய்வு கேட்டுள்ளனர்.
8. மதுரையில் 75 சதவிகித நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது அதிகாரிகள் அதீத கவனத்துடன் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் - முதன்மை செயலாளர் சந்திரமோகன் அறிவுரை.
9. மதுரை தெப்பக்குளம் பகுதியில் அரசு பேருந்தை மறித்து மேற்கூரையில் நின்றபடி நடனமாடிய இளைஞர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரி காவல்துறையினரிடம் ஓட்டுனர் புகார்.
10. மதுரை மாவட்டத்தில், நேற்று மட்டும் 13 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 75155-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 13 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 73776-ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.