மதுரையில் போஸ்டருக்கும், பேனர்களுக்கும் பஞ்சம் இருக்காது. இதில் அச்சிடப்படும் வசனங்கள் அதகளத்தை கிளப்பும். இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் மதுரையில் தீபாவளி வாழ்த்துகள்  தெரிவித்து ஒட்டிய போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது.


 





போஸ்டரில் வாலிப வயதில் வரும் அன்பு காதலுக்கு மரியாதை, வயோதிக வயதிலும் தொடரும்... காதலுக்குத்தான்... என்றும் முதல் மரியாதை என்ற வசனத்தை குறிப்பிட்டு முதல்மரியாதை படத்திற்கு புரோமசனும், தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளனர். முதல்மரியாதை திரைப்படம் சிவாஜி கணேசனுக்கு மட்டுமல்ல பாரதி ராஜா, இளைராஜா, வைரமுத்து ஆகிய ஜாம்பவான்களில் சேர்ந்து செய்த மிகப்பெரும் வெற்றிப்படைப்பு.




 

இந்நிலையில் திலகம் மறைந்தாலும் அவர் புகழ் மறையாமல் இருக்க மதுரை, சென்னை, திருப்பூர், வேலூர், பெங்களூரூவை சேர்ந்த அவரது ரசிகர்கள் மதுரையில் ஒட்டிய போஸ்டர்கள் நினைவுகளை தூண்டும் விதமாக உள்ளது. இதனால் மதுரை சினிமா ரசிகர்கள் கவனத்தை இந்த போஸ்டர் ஈர்த்துள்ளது.