குறிப்பிட்ட இடத்தில் பறவைகள் அதிகளவு வசிக்கிறது என்றால் அப்பகுதி சுற்றுச்சூழலுக்கு உகந்த இடமாக பார்க்கப்படும், அப்படிப்பட்ட வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தை தேடி தான் சென்றோம். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது கொள்ளுக்குடிபட்டி கிராமம். கிராமத்தில் உள்ள பெரிய கண்மாயில் தான் வேட்டங்குடி சரணாலயம் அமைந்துள்ளது.
நூற்றுக்கணக்கான பறவைகள் கொஞ்சிக் கத்தும் சத்தத்தை இனிமையை தருகிறது. கிராமத்தில் இருக்கும் மரங்களும், நீர் நிலைகளும் குளுமையை அள்ளித் தருகிறது. பசுமை நிறைந்த கொள்ளுபட்டி அமைதியில் தாலாட்டுகிறது. 38.4 ஏக்கர் கொண்ட பறவைகள் சரணாலயத்தில் 216 வகையான பறவைகள் வந்து செல்வதாக சொல்லப்படுகிறது. செப்டம்பர் முதல் மார்ச் வரை கிட்டதட்ட ஏராளமான வெளிநாட்டு பறவைகள் வந்து குஞ்சு பொறித்து செல்கிறது. முக்கிலிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டிவாயன் என ஏராளமான பறவைகளை பார்க்க முடியும்.
பறவைகளை காண வனத்துறை சார்பாக கண்காணிப்பு டவர்களும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர். இப்படி பறவைகள் வந்து செல்லும் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இருந்து வருகின்றனர். பறவைகள் அதிகளவு வந்து செல்வதால் கிராம மக்கள் தீபாவளியை முழுமையாக கொண்டாடுவதில்லை.
தீபாவளிக்கு முக்கியமாக போடப்படும் பட்டாசுகளை வெடிப்பதில்லை. அதே போல் மேள தாளங்கள், பெரும் ஸ்பீக்கர்கள் வைப்பது உள்ளிட்டவைகளையும் தவிர்த்து வருகின்றனர். கிராம மக்களின் இந்த செயலை பாராட்டி ஆண்டுதோறும் தீபாவளிக்கு முன் வனத்துறையினரும், மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்படுகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Devar Jayanti : 'யாருக்கும் ஆதரவு கிடையாது..! தங்க கவசத்த நானே எடுத்து வந்து வச்சிருவேன்' - 'ஷாக்' தேவர் நினைவிட பொறுப்பாளர்
இது குறித்து கிராமத்தைச் சேர்ந்த மகேஸ்வரி, ” எங்களுடைய முன்னோர்கள் வழிவழியாக தொடர்ந்து தீபாவளிக்கு வெடி போடாமல் இருந்து வருகிறோம். தீபாவளிக்கு மட்டுமல்ல எப்போதுமே பட்டாசுகளை வெடிப்பதில்லை. அதே போல் மேள தாளம் இசைப்பது, ரேடியோ செட் கட்டுவது என பறவைகளுக்கு எதிராக எந்த செயலும் செய்வதில்லை. எங்கள் கிராமத்து கண்மாயை வனத்துறை பாதுகாப்பதுற்கு முன்பில் இருந்தே கிரமா மக்கள் விழிப்புணர்வுடன் பாதுகாத்து வருகிறோம். வேறு இடங்களில் இருந்து கூட யாரும் பறவைகளை பிடிக்க வந்தால் கண்மாயில் இருக்கும் பறவைகள் அனைத்தும் வித்தியாசமாக கத்த ஆரம்பித்துவிடும். இதனால் கிராம மக்கள் அனைவரும் அவர்களை விரட்டிவிடுவார்கள். அந்த அளவிற்கு பறவைகளை தங்கள் வீட்டு சொத்தாக பாதுகாத்து வருகிறோம்” என்றார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்