மதுரையிலிருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து மதுரைக்கும் பகல் நேர விரைவு ரயிலாக தென் மாவட்டத்தில் மிக முக்கியமான ரயிலாக இருந்து வரும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் சேவை கடந்த 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் நாள் சேவை தொடங்கபட்டுள்ளது மேலும்,நாள்தோறும் காலை 7.10 மணிக்கு மதுரையிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 2.14க்கு சென்னையைச் சென்றடையும்,
மொத்த பயண நேரம் 7.04 மணி நேரம்,அதேபோன்று பிற்பகல் 1.50க்கு சென்னையிலிருந்து புறப்பட்டு இரவு 9.15க்கு மதுரை வந்தடையும், மொத்த பயணம் 7.25 மணி நேரம் சென்னையையும் மதுரையையும் இணைக்கின்ற பகல் நேர சூப்பர் ஃபாஸ்ட் ரயில் வைகை எக்ஸபிரஸ் விளங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று மதுரையிலிருந்து புறப்பட்ட வைகை எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் ஒன்று தாமதமாக வந்ததால் காலை 30 நிமிடங்கள் தாமதமாக 7.40க்கு புறப்பட்டுச் சென்றது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai Meenakshi Amman Temple: தமிழில் மாற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணையதளம்- பக்தர்கள் மகிழ்ச்சி!
ஆனாலும் சென்னைக்குச் சென்றடைய வேண்டிய நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட, 497 கி.மீ. தூரத்தைக் கடந்து 16 நிமிடம் முன்பாகவே சென்றடைந்து சாதனை படைத்ததுள்ளது. இந்த சாதனையானது ரயில் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில் மேலாளர்கள் ஆகியோரோடு மதுரை, திருச்சி மற்றும் சென்னை ஸ்டேசன் மாஸ்டர்களின் ஒருங்கிணைந்த பங்கேற்புதான் முக்கிய காரணமாகவும் வைகை எக்ஸ்பிரஸ் தாமதமாக வருவதை விரும்பாத அதே நேரத்தில் பயணிகளின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு இயங்கியது குறிப்பிடதக்கது.
Also Read : Crime: பாஸ்போர்ட் இணையதளத்தில் ஊடுருவிய ஹேக்கர்ஸ்..! அடுத்து நடந்தது என்ன தெரியுமா..?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்