வருகின்ற ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை குஜராத் மாநிலத்தில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் ஓவியம் ,உணவு ,உடை, விளையாட்டு உள்ளிட்ட கலாச்சார நிகழ்ச்சிகளும்  நடைபெற உள்ளது. சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு நேரில் அழைப்பதற்காக குஜராத் மாநில பழங்குடியின மேம்பாட்டுத்துறை அமைச்சர் குபேர்பாய் திண்டோர் ,  பழங்குடியின மேம்பாட்டு துறை சசிவாலயா செயலாளர் முரளி கிருஷ்ணா ஆகியோர் திண்டுக்கல்லுக்கு வருகை புரிந்தனர்.


Covid: 'திருப்தியில்லை... கொரோனா பரிசோதனையை உடனே அதிகரியுங்கள்..' மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்..!




திண்டுக்கல் சௌராஷ்ட்ரா சபா சார்பாக பெண்கள் கோலாட்டம் ஆடி வரவேற்பு அளித்தனர்.  அதில் உற்சாகமடைந்த குஜராத் மாநில அமைச்சர் பெண்களுடன் இணைந்து அவரும் கோலாட்டம் ஆடி உற்சாகமடைந்தார் . அமைச்சர் கோலாட்டம் ஆடியதை பார்த்து மக்களும் உற்சாகமடைந்தனர்.


Anbumani: 'ஸ்டெர்லைட்டை விட 100 மடங்கு பிரச்சினை.. அனைவருக்குமே என்.எல்.சி.யால் சிக்கல்' - அன்புமணி ராமதாஸ்


இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் குஜராத் மாநில அமைச்சர் பேசியபோது பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் இருந்து புலம் பெயர்ந்து தமிழகம் முழுவதும்  பல்வேறு மாவட்டங்களில் குடி பெயர்ந்தனர் . அவர்களை ஒன்றிணைக்கும் விதமாக  குஜராத் மாநிலத்தில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி  நடைபெற உள்ளது . குஜராத்தில் நடைபெற உள்ள  சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தங்களை அழைப்பதற்காக தாங்கள் நேரில் வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.




திண்டுக்கல் நாகல்நகர் நெசவாளர்கள் நெய்த பட்டுச்சேலை அமைச்சருக்கு பரிசாக வழங்கினார்கள் . நிகழ்ச்சியில் பழங்குடியினர் மேம்பாட்டு துறை சசிவாலயா செயலாளர் முரளி கிருஷ்ணா குஜராத்தில்  15 நாட்கள் நடைபெற உள்ள  சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம்  நிகழ்ச்சி குறித்து  எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் சௌராஷ்ட்ரா சபா முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக அமைச்சர் நாகல் நகர் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவிலில் கொடி பல்லைக்கிணை தூக்கி கோவிலை சுற்றி வலம் வந்து சாமி தரிசனம் செய்தார்.