தமிழக கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மாவட்டமான தேனி மாவட்டத்தில் நெல், திராட்சை, தென்னை, வாழை என அதிக அளவில் விவசாயம் செய்யப்பட்டு வரும் வேளாண் பகுதியாக விளங்குகிறது.


'அமைச்சர் அந்தர் பல்டியா? 2 நாற்காலி, ஒரு மைக் இருந்தால் போதுமா?'- பேரவையில் கொந்தளித்த அமைச்சர் அன்பில்!



கம்பமும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கூடலூர், சுருளிப்பட்டி, காமய கவுண்டன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் மட்டும் இல்லாமல் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் எந்த கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையும் மருத்துவ குணங்கள் அடங்கிய கருப்பு பன்னீர் திராட்சை  சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேலான பகுதிகளில் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.


Twitter blue tick: ப்ளூ டிக்கிற்கு காசு கட்டிட்டீங்களா? - சலுகைக்கு நாள் குறித்த ட்விட்டர் நிறுவனம்..!



இந்த பகுதியில் விளையும் கருப்பு பன்னீர் திராட்சை மதுரை, திண்டுக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழக , கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதியாக இருப்பதால், அதிக அளவில் கேரளாவுக்கு திராட்சை  ஏற்றுமதியும் செய்யப்பட்டு வருகிறது.


Gold, Silver Price: தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. இன்றைய விலை நிலவரம் இதுதான்...!



தற்போது வெயிலின் தாக்கம் காரணமாகவும் கடந்த சில மாதங்களாக சரிவர மழை பெய்யாததால் திராட்சை விளைச்சல் சற்று குறைந்துள்ளது. குறிப்பாக தற்போது கோடைகாலம் என்பதாலும் வெயிலின் தாகத்திற்கு மக்கள் அதிகமாக தேடும் தர்பூசணி பழம் மற்றும் சீட்லஸ் திராட்சை பழம் அதிகமாக இறக்குமதியாவதால் இப்பகுதியில் விளையும் திராட்சை இதே சீசனில் கிலோவிற்கு 50 ருபாய் வரையில் விற்பனையாகும். ஆனால் தற்போது கிலோவிற்கு 28 ருபாய் முதல் 30 ருபாய் வரையில் விற்பனையாகி வருவதால் கோடை கால சீசனில் போதிய லாபமின்மையால் திராட்சை விற்பனை சற்று குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண