திண்டுக்கல் அருகே ஆடிப்பெருக்கை முன்னிட்டு  சங்கிலி கருப்பு சாமிக்கு இரவு நடைபெற்ற 16 வகையான அபிஷேகம்  நடைபெற்றது.  


Fake Universities: முழிச்சுக்கோங்க.. நாடு முழுவதும் போலி பல்கலைக்கழகங்கள்; பட்டம் செல்லாது.. யுஜிசி கொடுத்த அலர்ட்




திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள ராமலிங்கப்பட்டியில் அமைந்துள்ள பாதாள செம்பு முருகன் கோவிலில்  ஆடிப்பெருக்கை முன்னிட்டு பாதாள செம்பு முருகன் கோவிலில் அமைந்துள்ள 15 அடி உயரம் உள்ள சங்கிலி கருப்புசாமிக்கு  சந்தனம், மஞ்சள், தயிர், இளநீர், பால் ,விபூதி உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. 


Alert : மக்களே கவனம்.. இந்த மாதிரி ஆள்சேர்ப்பு விளம்பரங்கள் வந்தா நம்பாதீங்க.. கலெக்டர் கொடுத்த அதிரடி அலர்ட்




குறிப்பாக சாமிகளுக்கு விபூதி அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு விபூதி பிரசாதமாக வழங்கப்படுவது வழக்கம். ஆனால் சங்கிலி கருப்பு சாமிக்கு விபூதி அபிஷேகம் செய்யப்படும் பொழுது பலமாக காற்று வீசி அபிஷேகம் செய்யப்படும் விபூதி பக்தர்கள் மேல் விழ சங்கிலி கருப்பு சாமி தங்களுக்கு ஆசீர் வழங்கியதைப் போன்ற காட்சி காணக் கண் கோடி போதாது என்பதைப் போல் அமைந்திருந்தது. திருநங்கைகள் மற்றும் பக்தர்களை பக்தி பரவசத்தில் ஆழ்த்தியது. அபிஷேகம் நிறைவடைந்து சங்கிலி கருப்பு சுவாமிக்கு செவ்வந்தி மாலை, ஐந்தாயிரம் எலுமிச்சை பழங்களால் செய்யப்பட்ட மாலையால் அலங்கரிக்கப்பட்டு ஆள் உயர தீபத்தால் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.


Crime: பார்ட்டியில் நடந்த கொடூரம்.. தோழியின் காதலனால் நிகழ்ந்த வன்மம்.. கோவாவில் பயங்கரம்..




தொடர்ந்து கிடா வெட்டி திருநங்கைகள் மற்றும் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான திருநங்கைகளும் பக்தர்களும்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே கருப்புசாமி வேடமிட்டு தீப்பந்தத்துடன் மேல தாளங்கள் முழங்க வழிபாடும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மட்டுமல்லாமல் பூஜையில் வைக்கப்பட்ட 20 ரூபாய் நோட்டு முதல் 500 ரூபாய் நோட்டு வரை பாதாள செம்பு முருகன் ஆதீனம் அவர்கள் பக்தர்களுக்கு வழங்கினார். மேலும் இந்த வழிபாட்டிற்கு வந்திருந்த திருநங்கைகளுக்கு பச்சை புடவையும் ஆதீனம் வழங்கினார். இதனால் அப்பகுதி முழுவதும் பிரம்மாண்டமாக விழாக்கோலம் ஆக காட்சி அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண