வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை ஆகிய வழக்குகளில், ஓராண்டாக தேடப்பட்டு வந்த, மதுரை மாவட்ட தலைமறைவு குற்றவாளி, சென்னையில் இருந்து விமானத்தில், அமெரிக்காவுக்கு தப்பி செல்ல முயன்ற போது, சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.


 

சென்னை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார் (29). இவர் மீது கடந்த 2022 ஆம் ஆண்டில் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதை அடுத்து  அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், செல்வக்குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக, இவரை தொடர்ந்து தேடி வந்தனர். ஆனால் இவர் போலீஸிடம் சிக்காமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அதோடு செல்வகுமார் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல திட்டமிட்டுள்ளார் என்ற தகவலும் போலீசுக்கு கிடைத்தது.

 

தப்பித்து செல்ல முயற்சி

 

இதை அடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட், செல்வக்குமாரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும், செல்வக்குமார் மீது எல்ஓசி போடப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து பிராங்க் பார்ட் செல்லும், லுப்தான்ஷா  ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், செல்வகுமார் பிராங்க்பார்ட் வழியாக, அமெரிக்காவுக்கு தப்பி செல்வதற்காக, சென்னை விமான நிலையம் வந்தார். 

 

மதுரை மாவட்ட தனிப்படை போலீசார்

 

சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், எல்லா பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களை ஆய்வு செய்வது போல், செல்வகுமாரின் பாஸ்போர்ட் ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது இவர் மதுரை மாவட்ட போலீசாரால், கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வரும் தலைமறைவு குற்றவாளி என்று தெரிய வந்தது. இதை அடுத்து செல்வக்குமாரை பயணம் செய்ய அனுமதிக்காமல், அவருடைய பயணத்தை குடியுரிமை அதிகாரிகள் ரத்து செய்தனர். அதோடு அவரை குடியுரிமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்துவிட்டு, மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து மதுரை மாவட்ட தனிப்படை போலீசார், செல்வகுமாரை கைது செய்து, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.



ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண