போதை காளான்,  கஞ்சா வைத்திருந்த வழக்கில், 3 பேருக்கு  தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து மதுரை போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

 

தென்மண்டலத்திற்கு உட்பட்ட 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பனை கஞ்சா கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கு தென்மண்டலத்தில் சிறப்பு காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் போதைக் காளான்,  கஞ்சா வைத்திருந்த வழக்கில், 3 பேருக்கு  தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து மதுரை போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.


 

போதை காளான் (Magic Mushroom) என்ற போதை தரும் காளான் விற்பனை கொடைக்கானல் பகுதியில் அதிக அளவில் பெருகி வருகிறது. இந்த நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு கொடைக்கானல் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையின் போது  1 கிலோ கஞ்சாவும், 100 கிராம் போதை காளான் (MAGIC MUSHROOM) வைத்திருந்ததாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த சந்தோஷ், ராஜபாண்டி மற்றும் பெங்களூரை சேர்ந்த கிளிப் அகஸ்டின், ஆகிய 3 பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.



 

இந்த வழக்கானது மதுரை  மாவட்ட போதை பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி செங்கமல செல்வன், முன்பாக விசாரணைக்கு வந்தபோது போதை காளான், கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கொடைக்கானலை சேர்ந்த  சந்தோஷ், ராஜபாண்டி மற்றும் பெங்களூருவை சேர்ந்த கிளிப் அகஸ்டின், ஆகிய 3 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும்,  தலா ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியான உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து மூவரும் மதுரை மத்திய சிறையில் காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துசெல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். போதை காளான் வைத்திருந்த வழக்கில் மூவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.